அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 10

– யஹியா வாஸித்.

எங்களூரில், எங்கள் அடுத்த ஊரில்,எங்கள்
அடுத்த மாவட்டத்தில் என பரவலாக,
வருடத்துக்கொருமுறை இனக்கலவரங்கள்
நடந்தன.

ஒரு தமிழன ஒரு சோனவன அடிப்பான்,ஒரு
சோனவன ஒரு தமிழன் அடிப்பான். அடிச்சிப்
போட்டு, மொத்தமாக அவனுகள இவனுகளும்,
இவனுகள அவனுகளும் அடிப்பானுகள்.ஆம்
இனக்கலவரம் ஆரம்பமாகிவிடும்.அது ஒரு
திருவிழா மாதிரி இருக்கும். ஜாலி.