ஆட்சியாளர்கள் மாறலாம்; ஆட்சியமைப்பு மாறாது

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்ததை அடுத்து, புதன்கிழமை (20) நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில், ரணில் விக்கிரமசிங்க மட்டும் வெற்றி பெறவில்லை. நாட்டை விட்டுத் தப்பி ஓட வேண்டிய நிலையில் இருந்த ராஜபக்‌ஷர்களும் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளனர்.