இந்திய சீன எல்லைகளில் பதட்டம் நிலவும் சூழ்நிலையில்; இந்தியாவின் தென்கோடியில்; சீனாவின் நடவடிக்கைளை அனுமதிப்பது விபரீதமானதே.

(தோழர் சுகு சிறிதரன் தலைவர் – SDPT)

இந்த நாட்டின் சமூக பொருளாதார நலன்கள் பிரதானமாக இந்திய உப கண்டத்துடன் இணைந்தது.இலங்கையின் பண்பாடு மொழி சமூக அரசியல் இயக்கங்களின் உருவாக்கத்திலும் இந்தியா பங்களித்திருக்கிறது.இலங்கையின் இன சமூக உருவாக்கம் இந்த உபகண்ட உறவு குடிப்பரம்பல் ஊடாகவே பிரதானமாக நடைபெற்றது.சுதந்திரத்திற்கான இலங்கையின் மாணவர் இயக்கங்கள் இந்திய தேசிய காங்கிரசின் செல்வாக்கில் உதயமானவை.