இந்திய சீன எல்லைகளில் பதட்டம் நிலவும் சூழ்நிலையில்; இந்தியாவின் தென்கோடியில்; சீனாவின் நடவடிக்கைளை அனுமதிப்பது விபரீதமானதே.

காந்தி நேரு அம்பேத்கர் இந்த நாட்டின் பல்லின சமூகப் பரப்பின் ஆதர்சமான தலைவர்கள்சோவியத் யூனியன் பொதுவுடைமை இயக்க செல்வாக்கு எமது தென்னாசிய பிராந்தியத்தில் பரவுவதற்கு இந்தியா பங்களித்திருக்கிறது.எமது நாட்டின் நலன்கள் பிரதானமாக இந்தியா என்ற மாபெரும் நாட்டுடன் பிரதானமாக இணைந்தது.சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களின் ஆன்மீக ஸ்தலங்கள் யாத்திரைகள் இந்திய உபகண்டத்திலேயே பிரதானமானது.தற்காலத்தில் நெருடலாக இந்நாட்டில் பிரதான தேசிய சமூகங்களுக்கெதிரான செயற்பாடுகளுடன் இணைந்ததாக இந்திய விரோத செயற்பாடுகளும் நிகழ்கின்றன.

வண்ணங்களின் கலவையாக 140 கோடி மக்கள் வாழும் உபகண்டத்தின் பாதுகாப்பு பரஸ்பர சமூக பொருளதார நலன்கள் இந்த நாட்டுடனும் இணைந்தது என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.130 ஆண்டுகளுக்குமேல் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பையும் இரத்தத்ததையும் சிந்திய மலையக மக்கள் நாடு கடத்தப்பட்டதும் இந்தியாவிற்கு தான்.இன வன்முறைகளில் அகதிகளான லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக தஞசம் புகுந்ததும் இந்தியாவில் தான்.

இந்த நாட்டில் இயற்கை பேரழிவுகள் வந்த போது உடனடியாக உதவிக்கு வந்ததும் இந்தியாவே.யுத்த பேரழிவுக்குள்ளான நாட்டில் இயன்றவரை பாரிய அளவிலான வீடமைப்பு திட்டங்கள் உள்ளக கட்டுமானங்கள் சௌக்கிய சேவை கல்வி என பலதுறைகளில். எமது நன்மை தீமைகள் பாரிய அளவில் பங்களிப்பு செய்ததும் இந்தியாவே.இலங்கையில் பிராந்திய மட்டத்தில் அதிகாரப்பகிர்வு கட்மைப்பொன்றை கொண்டுவருவதற்கு இந்தியா அர்பணித்தது.

அதற்கான அதிகாரங்களை வழங்குவதில் இலங்கையில் இழுபறிகள் இருந்தாலும் இன்றளவில் நிலவுகிறது. அதிகாரப்பகிர்ந்தளிப்பு தொடர்பில் இது ஜனநாயக புரட்சி எனலாம்முன்னாள் பாரதப்பிரதமர் ராஜிவ்காந்தி இதற்காக பேரினவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானார். தமிழ் பாசிசவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்இலங்கை இந்திய சாதாரண மக்களிடையேயான உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும்.வங்க கடல் தொடர்ந்து செங்கடலாக இருப்பது வேதனையானது .அண்மையில் நிகழ்ந்த தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் இந்தியா இலங்கை சாதாரண மக்களிடையோன உறவுகளை சீர்குலைகும் நடவடிக்கையாகும்.

இந்திய சீன எல்லைகளில் பதட்டம் நிலவும் சு10ழ்நிலையில் வெறும் 49 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இலங்கையின் வட எல்லையில் இந்தியாவின் தென்கோடியில் இலங்கையின் தீவகப்பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைளை அனுமதிப்பது விபரீதமானதே.இந்த விபரிதமான விளையாட்டை நிறுத்தியே ஆக வேண்டும்.இந்தியாவுடனான உறவு உணர்வு பூர்வமானது பரஸ்பரநம்பிக்கை புரிதல் அடிப்படையில் மீள் கட்டி எழுப்பபட வேண்டும். உறுதிப்படுத்தபட வேண்டும் இந்தியாவின் தென்கோடியில்; சீனாவின் நடவடிக்கைளை அனுமதிப்பது விபரீதமானதே.