இந்நிலை தொடர வேண்டுமா?

(Janaki Karthigesan Balakrishnan)
இலங்கையில் இனத்தால், மொழியால் மனிதர் பலியாகி, மதங்களால் மனிதர் பலியாகும் படலம் ஆரம்பித்துள்ளது. அவற்றை செய்திகளாகவும், வதந்திகளாகவும், ஊகங்களாகவும் பரப்பி, பின் அவற்றின் தாக்கங்களை கவிதைகளில் வடித்தெடுத்தும், இலக்கியங்களில் படைத்தும், வரலாற்றுக் காவியங்களுமாக்கிச் செல்கின்றோமே தவிர, இவற்றை எப்படித் தவிர்ப்பது, அறவே ஒழிப்பது என்பதற்கான செயற்பாடுகள் ஏதுமின்றி, தொடர்ந்தும் அல்லலுறுகின்றோம், தவிக்கின்றோம்.