இலங்கையின் மாகாணசபைகளைமக்களுக்குப் பயனுடையவைகளாகஆக்குவதற்குஏதாவதுவழியுண்டா!(கடிதத் தொடர் – 12)

அன்பார்ந்தநண்பர்களே!
ஆற்றல் மிகுதோழர்களே!

13வது திருத்தத்தில் அதிகாரங்கள்; குறைவாகஉள்ளனஎன்பதுஒன்று!
அதுபலகுறைபாடுகளைக் கொண்டுள்ளதுஎன்பதுமற்றொன்று!

13வது திருத்தம் பற்றிஎன்னிடம் கேட்டால் அதுதொடர்பாகபின்வரும் அடிப்படைகளில் அதுநோக்கப்படவேண்டும் – அணுகப்படவேண்டும்என்பேன்.
ஒன்று– 13வது திருத்தம் போதியஅளவுஅதிகாரங்களைத் தரவில்லைஎன்பது. அதாவதுமாகாணசபைஅமைப்புமுறையானதுஒருகாத்திரமானஆற்றல் கொண்டசபையாகவும் அரசாங்கமாகவும் செயற்படுவதற்கும் அபிவிருத்திகளைமேற்கொள்வதற்கும்,
மக்களுக்குஅடிப்படையாகதேவைப்படுகின்றஅனைத்துசேவைகளையும் செய்வதற்கும்
வேண்டியசட்டவாக்க,நிதிமற்றும் நிறைவேற்றதிகாரங்களைபோதியஅளவுகொண்டதல்லஎன்பது. அதாவது, 13வது திருத்தம் மாகாணசபைகளுக்குகுறைந்தஅளவுஅதிகாரங்களையேதந்திருக்கின்றதுஎன்பது.
மற்றது, 13வது திருத்தம் சட்டரீதியில் பலகுறைபாடுகளைக் கொண்டுள்ளதுஎன்பது. அதாவது
அளவுக்குமீறியதாகமத்தியஅரசின் தலையீடுகளைக் கொண்டதாகஉள்ளமை:
அதிலுள்ளசட்டஏற்பாடுகளைக் கொண்டேஒருகையால் கொடுத்து மறு கையால் எடுத்துவிடக் கூடியசட்டஓட்டைகளைக் கொண்டுள்ளமை:
மாகாணசபைக்கானநிர்வாகக் கட்டமைப்புக்கள் தொடர்பாக 13வது திருத்தம் சரியானஏற்பாடுகளைத் தராதமை:
தேசியக் கொள்கை,தேசியமுக்கியத்துவம் என்பவற்றின் பெயரில் மாகாணசபைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளஅதிகாரங்களைஅர்த்தமற்றதாகஆக்கும் வகையானசட்டஏற்பாடுகளை 13வது திருத்தம் தனக்குள்ளேயேகொண்டிருக்கின்றமை – அத்துடன்
இலங்கையின் அரசியல் யாப்பில் அடிப்படையாகஉள்ளபொதுவானகுறைபாடுகள் 13வது திருத்தஏற்பாடுகளிலும் பாதிப்புகளைஏற்படுத்துகின்றமை,
இவ்வாறாக 13வது திருத்தம் அதற்குள்ளேயேபெரும் குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றதுஎன்றவிமர்சனம்.
13வது திருத்தம் குறைவானஅதிகாரங்களைக் கொண்டிருக்கின்றதுஎன்பதிலிருந்தே 13வது திருத்தத்தில் வழங்கப்பட்டவைக்குமேலதிகமாகஅதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதற்கானகோஷங்கள் எழுப்பப்படுகின்றன. இது 13வது திருத்தத்துக்கும் அப்பால் நடைபெறவேண்டியவிடயமாகும்.
ஆனால் 13வது திருத்தமானதுஅதனால் கொடுக்கப்பட்டுள்ளஅதிகாரங்களைக் கூட பிரயோகிக்க–பயன்படுத்தமுடியாதவகையில் குறைபாடாகஅமைந்திருக்கின்றது–அமைக்கப்பபட்டிருக்கின்றதுஎன்பது 13வது திருத்தத்துக்குஉள்ளார்ந்தவிடயமாகும்.
13வது திருத்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளவற்றையும் விடஅதிகமாகஅதிகாரங்களைப் பெறுதல் அல்லதுகொடுத்தல் என்றவிடயம் இன்னொருஅரசியல் யாப்புத் திருத்தத்தாலேயேமுடியும். ஆனால் 13வது திருத்தத்தில் உள்ளார்ந்தமாகஉள்ளகுறைபாடுகளை
சரியானசட்டவிளக்கங்கள் ஊடாகவும்,
உரியநிர்வாகஏற்பாடுகள் மூலமாகவும்,
தேவையானசாதாரணசட்டங்கள் மூலமும் அந்தக் குறைபாடுகளைநீக்கமுடியும்.

13வது திருத்தத்தைமுழுமையாகநிறைவேற்றும்படிகோருதல் வேறு:
அதனைஉடனடியாகமுறையாகநிறைவேற்றும்படிகோருவதுவேறு.

13 பிளஸ் என்றுஅவ்வப்போதுபேசப்பட்டாலும்,உரத்தகுரலில் இந்தியாவும் அமெரிக்காவும் ஐ நா மனிதஉரிமைகள் அமைப்பின் தீர்;மானமும் அடிக்கடிபேசுவது 13வது திருத்தத்தை இலங்கைஅரசாங்கம் முழுயாகநிறைவேற்றவேண்டும் என்பதே.
13வது திருத்தத்தைமுழுமையாகநிறைவேற்றவேண்டும் என்று கூறுபவர்கள் எவரும் 13வது திருத்தம் முறையாகநிறைவேற்றப்படவேண்டும் என்றுஏன் கோருவதில்லைஎன்பதுவும் என்னுள் எழும் பிரதானமானகேள்வியாகும்.
13வது திருத்தத்தைமுழுமையாகநிறைவேற்றும்படிகோருபவர்களின் கருத்தில் பெரும்பாலும் உள்ளஉள்ளடக்கம் மற்றும் புரிதல் என்னவெனில்:- மாகாணசபைக்குபொலிஸ் மற்றும் நிலஅதிகாரங்களும் போதியஅளவுநிதிவளங்களும் வழங்கப்படவேண்டும் என்பதே.
அப்படியானால்,அரசியல் யாப்புர்Pதியாகமாகாணசபைகளுக்குவழங்கப்பட்டுள்ள ஏனைய அனைத்துசட்டவாக்கமற்றும் நிறைவேற்றதிகாரங்கள் முறையாகநடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்றகேள்விக்குதெளிவானபதிலையாரும் தரவில்லைஎன்பதோடுஅவற்றின் மீது இன்றுவரையாரும் அக்கறைசெலுத்தவில்லைஎன்பதுவும் உண்மையாகும். என்னுடையபுரிதலின்படிமக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமாகாணஅமைச்சரவை இன்னமும் ஒருஅரசாங்கமாகசெயற்படவில்லைஎன்பதே. அதனைஒருவெறும் ஆலோசனைச் சபையாகவேகொழும்புமையஅரசாங்கம் நடாத்தமுனைகிறது.
அதேவேளைமாகாணமுதலமைச்சரும் மற்றும் அமைச்சர்களும் தாங்கள்தான் மாகாணஅரசாங்கம் என்பதைநிலைநாட்டுவதற்கானஎந்தநடவடிக்கையிலும் ஈடுபடாமல் வெறுமனேஒப்பாரிவைக்கும் குழுவாகமட்டுமேஆக்கிவைத்திருக்கின்றார்கள்.
இப்போதையநிலையில் பொலிஸ் அதிகாரம் கொடுத்தாலும் அதுஆளுநரின் பொலிசாகமட்டுமேஅமையும். நிதிவளம் ஆளுநரின் அதிகாரத்துக்குக் கொடுத்தாலென்னஅல்லதுமத்தியஅரசாங்கமேநேரடியாகச் செலவழித்தாலென்னஅதில் எந்தவேறுபாடும் ஏற்படமாட்டாது.
எனவேமாகாணசபைகள் 13வது திருத்தத்தின்படிமுழுமையாகநிறைவேற்றப்படவேண்டியதுஅவசியமென்பதோடுஅதனிலும் மேலாகஅவைமுறையாகநடைமுறைப்படுத்தப்பட்டால்த்தான் இப்போதுள்ளகுறைந்தஅதிகாரஅளவின் மத்தியிலும் அவைகாத்திரமானவையாக–மக்களுக்குபயனுடையவையாகசெயற்படமுடியும்.
மாகாணசபைகளின் அதிகாரங்கள் தொடர்பாக 13வது திருத்தஏற்பாடுகளில் உள்ளார்ந்தரீதியாகஉள்ளகுறைபாடுகளைநீக்குவதற்குவடக்குமாகாணஆட்சியாளர்கள்:-

 1. ஜனாதிபதியுடன் பேசவேண்டும். இனவாதிகளல்லாதசட்டநிபுணர்களும் நிர்வாகஅனுபவசாலிகளும் கொண்டதொருஅதிகாரப் பகிர்வுஆணைக்குழுவொன்றைஅமைக்கும்படிகோரவேண்டும்:
 2. 13வது திருத்தஅரசியல் யாப்புஏற்பாடுகள் கொண்டிருக்கும் அர்த்தத்தின்படிமக்களால் தெரிவுசெய்யப்பட்டமாகாணஅமைச்சரவை இருக்கும் போதுஆளுநர் மாகாணஅரசின் ஒருசம்பிரதாயத் தலைவர் மட்டுமேஎன்பதைநிலைநிறுத்தவேண்டும்.
  அதற்குத் தக்கபடியே 1987ம் ஆண்டின் மாகாணசபைகள் சட்டத்தின் ஒவ்வொருபிரிவும் விளக்கம் கொள்ளப்படவேண்டும் என்பதைதேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தின் ஊடாகசட்டபூர்வமாகநிலைநாட்டுதல் வேண்டும்.
  அதேவேளைமத்தியஅரசாங்கம் சட்டத்துக்குப் பிழையாகவும் சட்டத்துக்குப் புறம்பாகவும் நடந்துகொள்ளும் விடயம் ஒவ்வொன்றின் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தல் வேண்டும்.
  நீதித்துறைசுதந்திரமானதுஅல்லநீதியரசர் ஜனாதிபதிக்குவேண்டியவர் என்றவிவாதங்கள் தேவையற்றவை. நீதிமன்றம் அரசியல் யாப்புபாரம்பரியத்துக்குமுரணாகநடந்துகொண்டால் அதனை இந்தஉலகம் அறியட்டும்,
 3. 13வது திருத்தத்தில் உள்ளகுறைபாடுகளைநீக்கும் கோரிக்கைகளைக் கொண்டதீர்மானங்களைதெளிவாகவரையறுத்துஅவற்றைமுன்னுரிமைவரிசையின் அடிப்படையில் ஒன்றின் பின் ஒன்றாகமாகாணசபையின் தீhமானங்களாகநிறைவேற்றிஅவற்றைஅனைத்துஅரசியல் சமூகமட்டத்தினரதும் கவனத்துக்குக் கொண்டுவருதல் வேண்டும்:
 4. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டள்ளஆளுநரல்ல,மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளஅமைச்சரவைதான் மாகாணஅரசாங்கம் என்பதையும்:
  மத்தியஅரசாங்கமானதுமாகாணவிடயங்களில் அரசியல் யாப்பின்படிநடந்துகொள்ளவேண்டும் என்பதைநிலைநாட்டவேண்டும். அதற்காகசட்டநியாயங்களைமையமாகவைத்துவன்முறைஎதுவும் அற்றதொடர்ச்சியானமக்கள் போராட்டங்களைநடாத்துதல்வேண்டும்.
 5. கூட்டமைப்பினர் தென்னிலங்கையிலுள்ளமுற்போக்குசக்திகளின் துணையோடு இலங்கையின் முன்னாள் உயர்நீதிபதி;கள் மற்றும் அரசியல் யாப்புவிடயங்களில் துறைபோனசட்டஅறிஞர்களைக் கொண்டஒருநிழல் நீதிமன்றத்தைஆக்கிஅதன் மூலம் 13வது திருத்தம் தொடர்பானசரியானசட்டவிளக்கங்களைவெளிக் கொண்டுவருதல்; வேண்டும்:
 6. அதிகாரப் பகிர்வுதொடர்பாக 13வது திருத்தத்தில் உள்ளகுறைபாடுகளையும் மத்தியஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மாகாணசபைகளுக்குஎதிராக இழைக்கும் சட்டவிரோதசெயற்பாடுகளையும் தெளிவாகவிளக்கும் அறிக்கைகளைவெளிக் கொணர்ந்துஅதன் அடிப்படையில் பல்வேறுமட்டத்திலும் கருத்துவிளக்கச் சந்திப்புகளையும் அரசியற் பிரச்சாரங்களையும் மேற் கொள்ளுதல் வேண்டும்:
 7. 13வது திருத்தத்தில் உள்ளகுறைபாடுகளைநீக்குவதற்கும் மாகாண சபை அமைப்பைசக்திமிக்கதாகஆக்குவதற்கும் ஆதரவாகஅனைத்து இன அரசியல் சமூக ஜனநாயகமுற்போக்குசக்திகளை இலங்கைமுழுவதையும் தழுவிய ஓர் அதிகாரப் பகிர்வு இயக்கமாக–மன்றமாகஅணிதிரட்டுதல் வேண்டும்:
 8. மாகாணசபையானதுபொது மக்களுக்குமுடிந்தஅளவுஉடனடியாகசேவையாற்றுவதற்குஎன்னென்னசட்டங்களையெல்லாம் உடனடியாகஆக்கவேண்டுமோஅவற்றையெல்லாம் காலதாமதமின்றிஆக்குதல் வேண்டும்:
 9. மாகாணஅரசாங்கத்தால் மேற்கொள்ளக் கூடியஅபிவிருத்தித் திட்டங்கள்,
  கணவனை இழந்தபெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்குஉரியபுதியவாழ்வுத்; திட்டங்கள’;:
  உடல்ரீதியாகபாதிக்கப்பட்டோருக்குபுனர்வாழ்வு,
  இளைஞர்களுக்குவேலைவாய்ப்புகள்,
  இடம் பெயர்ந்துமீள்குடியேறியோருக்குமேலதிகஉதவிகளைதொடர்ந்துவழங்குதல்
  போன்றவிடயங்களுக்குஉரியநிதியங்களை–அமைப்புகளைசட்டபூர்வமாகஉருவாக்கி,அவற்றிற்கானதிட்டங்களைதெளிவாகவெளியிட்டு,அவற்றிற்கானநிதிவளங்களைசாத்தியமானஎல்லாவழிகளிலும் – மூலங்களிடமிருந்தும் முறைப்படிபெற்று – திரட்டிமக்களுக்குப் பயனுடையவகையில் காரியங்களைஆற்றவேண்டும்
  இவ்வாறாகமாகாணஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் தலைமையானதுபல்வேறுமுனைகளிலும் திட்டங்களைவகுத்துநடைமுறையாக்கும் புத்தியும் காரியசித்தமும் கொண்டதாகசெயற்படவேண்;டும் – செயற்படமுடியும் – செயற்படுவதற்கானஎல்லாவளங்களும் வாய்ப்புகளும் துணைகளும் சட்டரீதியானநியாயங்களும் வடக்குமாகாணஆட்சித் தலைமைக்குஉண்டு. வடக்குமாகாணசபையே ஏனைய மாகாணங்களுக்குவழிகாட்டியாகஅமையவேண்டும்.
  இங்குதேவைப்படுவது
  செய்யவேண்டும் என்றவிருப்பம் – மக்கள் நலன் மீதானஉண்மையானஈடுபாடு–தீர்மானகரமானநிலைப்பாடுகள் – உறுதியானஅர்ப்பணிப்பு–அயராதஉழைப்பு.
  வாக்கில் உண்மையும்,நெஞ்சில் உரமும்,நேர்மைத் திறனும் கொண்டமக்கள் தலைமைஉண்டாயின் சத்தியமேவெல்லும் – நீதியேநிலைபெறும்.
  “மனமுண்டானால் இடமுண்டு’ – “அடிக்குமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்”
  “எறும்பூரக் கற்குழியும்” – “முயற்சிதிருவினையாக்கும்” இவை வெறும் பழமொழிகள் அல்ல. தமிழர்களின் வரலாற்றுஅனுபவங்களின் வெளிப்பாடுஎனக் கூறி இக்கடிதத் தொடரை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
உங்கள் அன்புநண்பன் – தோழன்
அ.வரதராஜப்பெருமாள்.