இலங்கையில் போர் முடிவிற்கு வந்து 8வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

போரில் இறந்த மக்களின் சரியான புள்ளிவிபரம், காணாமல் போனவர்களுடைய, சிறையில் இருப்பவர்களுடைய சரியான புள்ளிவிபரங்கள் இதுவரை ஒரு அமைப்பிடமும் இல்லை. அதை ஏன் இன்றுவரை ஒரு அமைப்போ அல்லது அரசியல் கட்சியோ செய்யவில்லை(?)

அதை வடமாகாண முலமைச்சரும் செய்யவில்லை, அவரின் பரிவாரங்களான மந்திரிகளும் செய்யவில்லை.

இன்றுஇருக்கும் வடமாகாண கல்வியமைச்சரிடம் கூட எவ்விதசரியான புள்ளிவிபரங்களுமில்லை, போரினால் எத்தனை சிறுவர்கள் இறந்தார்கள், காணாமல் போனார்களென்று.

ஆனாலொன்று, “இவர்கள் எல்லோரும் இலங்கை அரசிடமே சகலத்தையும் பெற்று செளபாக்கியங்களாக வாழ்கின்றனர். இலங்கை அரசிற்கே சேவகமும் செய்கின்றனர்,,

இலங்கை மத்தியரசு சேகரித்த தரவுகள் கூட இவர்கள் இன்றுவரை சேகரிக்கவில்லை என்பது இன்றுவரையுள்ள உண்மையானவிடையம்.

இதற்குள் வேடிக்கையென்னவென்றால்; “இலங்கையரசிடமிருந்து தமிழர்களை காப்பாற்றி, தமிழர்களுக்கு விடுதலை வாங்கி தரப்போவதாகச்சொல்லுவதுதான்,,

>எப்பொழு தமிழர்கள் தமிழர்களிடமிருந்து விடுதலை பெறுவார்களா, அன்றுதான் தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரம்…!!

Subakaran Mayilvaganam