இலவுகாத்த கிளியின் இன்னோர் அத்தியாயம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கற்பனைகளும் கனவுகளும் அழகானவை. மனதுக்கு நிறைவைத் தருவன! ஆனால், யதார்த்தம் அவ்வளவு இனிமையாக இருப்பதில்லை. கண்களை மூடியபடி, உலகம் இருட்டு என்ற பூனையின் கதைகளை, இந்த உலகம் எத்தனையோ தடவைகள் கேட்டிக்கிறது. ஒவ்வொரு தடவையும், பிறர் சொல்வதைப் பூனை கேட்பதாய் இல்லை. பூனை கேட்காது விட்டாலும், அவலம் என்னவோ மனிதர்களுக்குத் தானே நேர்கிறது. என்ன செய்ய? நம்பிக் கெட்டவர் சிலர்; நம்பச் சொல்லிக் கெடுப்பவர் பலர்.