இளையோரின் ஏற்றத்திற்கான எமது முயற்சியை கொச்சைப்படுத்தாதீர்கள்!

(கம்பவாரிதி இ. ஜெயராஜ்)

உயர் ஆளுமை பெற்று நம் இளையோர் உயர்வு பெற வேண்டும் எனும் நோக்கோடு அண்மையில் கிளிநொச்சியில் நாம் ஆரம்பித்த புதிய முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டினை இணையவெளியில் பார்க்க முடிந்தது.