இவர்களுக்கு வாக்களிக்கும் மக்களுக்கும் இதுதான் நடக்கும் போல தெரியுது….

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவா
வீட்டுச் சின்னத்திற்கு புள்ளடி போடும்படி கேட்கிறார்கள்?

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவா
அருந்தவபாலன் சயந்தனுக்கு ஹெல்மட்டால் அடித்தார்?

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவா
அஸ்மினும் ஜெயசேகரமும் சண்டை போடுகின்றனர்?

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க அவசரப்பட்தாலா
அம்பாறையில் தமிழரசு வேட்புமனு நிராகரிக்கப்பட்டது?

தன் வீடு கட்ட கருங்கல்லும் மாபிள் கல்லும் இறக்குமதி செய்த
மாவை சேனாதிராசா, இவர்களுக்கு ஒரு கட்டு ஓலையாவது வாங்கிக் கொடுப்பாரா?

காணாமல் போனவர்களின் உறவுகள் 300 நாட்களாக போராடுகின்றனர்

கேப்பாப்பிலவு மக்கள் 280 நாட்களாக போராடுகின்றனர்

அரசியல்கைதிகள் விடுதலை கோரி போராடி வருகின்றனர்.

இவர்களுடைய எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள்
ஊள்ளு+ராட்சி தேர்தலில் போட்டியிட முனைவது எதற்காக?

முன்னாள் போராளிகளுக்கு தலா 56 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர்கூட இந்த தீர்ப்பிற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை?

ஏன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்கூட வாய் திறக்கவில்லை?

தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது!