எங்களுக்குச் சொந்தமான கச்சதீவை தமிழகத்துடன சேர்ப்பதற்கு சீமான் யார்?

இங்கு நாங்கள் வேலை செய்யும் இடங்களில் வரும்
வாடிக்கையாளர்களுடன் பேசிப்பழகி நட்பு
கொள்வதுண்டு அவர்கள் பெருமையாகச் சொல்வார்கள்,
இலங்கைத்தமிழர்கள் புலிகள் , புலிகளின் தலைவன்
பிரபாகரன் என்று, தமிழ் மொழி என்று ஒன்றிருப்பதை
அறியாதவர்களுக் கூட பிரபாகரன் யார் என்பது தெரியும்,
அப்படியிருக்க தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும்
பிரபாகரனின் பெயரை சேர்த்தவர் என்று ஒருவரை
பாராட்டி கொண்டாடுகிறார்கள், , வெட்கமே இல்லாமல்
இப்படிஎப்படிச் சொல்ல முடிகின்றது,
வெளிச்சம்அடித்து இதுதான் சூரியன்
என்று காட்டுவது போல் உள்ளது!எம் ஜி ஆர், வைகோ, நெடுமாறன் திருமாவளவன் ஆகியோர்
செய்ததில் எத்தனை விகிதம் இவர் செயலாற்றினார்,
உண்டியலில் பிரபாபரனின் படத்தைப்போட்டு கேவலப்படுத்தியதைவிட
வைகோ என்றொருவர் இல்லாவிட்டால் இன்றும் எவராலும்
இந்தியாவில் விடுதலைப்புலிகளின் கொடிகளையோ , பிரபாகரனின் பெயரையோ பொது வெளியில் உச்சரித்திருக்க முடியாது, இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி அதற்கான தடையை தகர்த்தவர் வைகோ,
ஜெயலலிதாவை ஈழத்தாய் என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள்,
அதே ஜெயலலிதா தான் போர் உச்சத்தில் நடக்கும்போது
போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று
திருவாய் மலர்ந்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது!
பிரபாகரனைப் கைது செய்து இந்தியாவில்
தூக்கிலிட வேண்டும் என்றும் ஆவேசமாக சபதம்
எடுத்தவரும் அவர்தான்,முள்ளிவாய்க்கால் போது கருணாநிதிக்
கெதிரான நிலை அதிகரித்ததும் அந்தச்சந்தர்ப்பத்தை தனக்குச்
சாதகமாக பயன்படுத்த எடுத்துக்கொண்ட வேடமே ஈழத்தாய்,
இந்தியாவில் மிக முக்கியமாக தமிழகத்தில் தமிழீழம்,
பிரபாகரன்ஆகிய இரண்டு பெயர்களும் நீர்த்துப்போக மிக
முக்கியமானவர்கள் திருமுருகன் காந்தி மற்றும் சீமான் ஆகியோர்!
இவர்கள் இருவரும் DELHI SOUTH BLOCK கில் உள்ள மத்திய அரசின் திட்டமிடலின் ஒரு அங்கம், அவர்களால் உருவாக்கப்பட்டவர்கள், தமிழகத்தில் தமிழீழம், பிரபாபரன் என்று யாராவது பிரசாரம் செய்து வாக்கு அரசியல் செய்தால் மக்கள் தூக்கி எறிவர் என்பதைக்காட்ட சீமானையும் , தமிழீழத்திற்காக பிரபாகரனுக்காக ஆதரவு தெரிவித்து மெழுகு வர்த்தி எரித்தாலே தண்டைக்குள்ளாவீர்கள் என்று மக்களைப் எச்சரிக்க,பயமுறுத்த திருமுருகன் காந்தி என இருவரையும் திட்டமிட்டு உருவாக்கியிருக்கின்றனர்,
திராவிடக்கட்சிகள் உயிர்ப்புடன் இருக்கும் வரை தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் தழைத்தோங்க முடியாது என்பதற்காக டெல்லி மேலாண்மையால் இவர்களுக்கு எடுத்துக் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் தமிழனைத் தமிழனே ஆள வேண்டும் என்று, அன்று ஹிந்தி எதிர்ப்பு அலை வென்றதுபோல் இன்று இந்தக்கோஷம்,

திருமுருகன் காந்தியை மே 17 இயக்கம் ஆரம்பிப்பதற்கு
முன் யாரென்று மக்களுக்குத் தெரியவே தெரியாது!
அதற்கு முன் அவரது செயற்பாடுகள் என்ன என்பதும் தெரியாது
கூடங்குளப்போராட்டத்திலும் பங்கெடுத்தார் என்பது மட்டும் தெரியும், மே 17 இயக்கத்தை தொடங்கியதும் ஈழ புலம்பெயர்அமைப்புகளின் கவனத்தைப் பெற்றார் பிரபலமானார்!
சீமான் தலைவருடன் எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை அதுவும் புலிகளுக்கெதிரான தடையை நீதிமன்றம் எடுத்தபின்பே பொதுவெளியில் காட்டினார் என்பது மிக முக்கியமான தகவல்,
2008 ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகம் நடத்திய எதிர்ப்பு கூட்டத்தில் அமீருடன் கைதாகி விடுதலையானவர், அமீரை டெல்லி மேலாண்மையால் வளைத்துப் பிடிக்க முடியவில்லை
சீமான் அவரது பிரதான அனுசரணையாளர்களான
மணல்மாபியா வைகுந்தராஜன், புலி எதிர்ப்பாளர்
கல்வித்தந்தை எனப்படும் பச்சைமுத்து ஆகியோரினால்
மிகச் சுலபமாக வளைக்கப்பட்டார், எங்கே பற்றுவதற்கு கொழு கொம்பு கிடைக்குமா என்றிருந்த ஈழத்தமிழர்கள் சிலருக்கு வராதுவந்த மாமணியாக கிடைத்தார் சீமான், புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் ஈழத்தில் சில NGO க்கள் எப்படி சுகபோக வாழ்க்கை வாழ்கின்றார்களோ அதே போல தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியை வைத்து சீமான்,
இவரால் சிறப்பாகச் செய்யக்கூடியது ஒன்றே ஒன்று
Kangaroo operationஅதைச் செவ்வனே செய்தால்
வாழ்நாள் முழுக்க சிறப்பாக வாழலாம்
தமிழனைத் தமிழனே ஆளவேண்டும் என்பது உண்மையான விருப்பமானால், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தை அமைப்பு, ஏன் அதிமுக, போன்ற கட்சிகளை ஆதரிக்கலாமே,
யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களுக்கு எதிர்ப்பும் நையண்டியும் கூறுவதே முதல் வேலை, திரையுலகில் இருந்து வரக்கூடாதென்றால், இவர் எங்கிருந்து வந்தார்?
அரச ஊழியர்ஓய்வெடுத்த பின் அரசியலுக்கு வருவதுபோல் தான் திரையுலகிலிருந்து ஒதுங்கி வருவதும், அதையெல்லாம் தடுப்பதாயின் இளமைப்பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே களத்தில் இறங்க முடியும்,அப்படியொரு நிலையில் சீமானும் அரசியல் பேசக்கூடாதென்றால் அவர் சம்மதிப்பாரா!
யாரும் அரசியலுக்கு வாருங்கள் மக்களைப்பற்றிய
சிந்தனையுடன் அன்றைய காமராஜரைப் போல ,
அட அவரைப்போன்றாவது வேண்டாம் அவரின் நேர்மையான அரசியலுடன் மக்களைப்பற்றிய சிந்தனையில் 40% மான எண்ணப்பாட்டுடனாவது வாருங்கள்,
அதி சரி எங்களுக்குச் சொந்தமான கச்சதீவை
தமிழகத்துடன சேர்ப்பதற்கு சீமான் யார்? அதற்கு ஆதரவு கொடுக்கும்ஈழத்தமிழர்களே கொஞ்சம் யோசியுங்கள்
இது ஈழத்துக்குச் சொந்தமான தீவு,என்பதை மறந்து விடாதீர்கள்.

(Sara Sivam)