“எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதா தண்ணீரை ஊற்றி அணைப்பதா”

(கருணாகரன்)
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிறகு, கிளிநொச்சிக்குச் சில சிங்கள நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடைய வருகையின் நோக்கம், “மதக வன்னி” (Mathaka Wanni) என்ற என்னுடைய சிங்களப் புத்தகத்தைப்பற்றிய உரையாடலைச் செய்வதும் என்னைச் சந்திப்பதுமே. ஆனால், பேச்சு அரசியற்பக்கமாகவும் திரும்பியது. அப்பொழுது அவர்களிடம் கேட்டேன், “ஜனாதிபதித்தேர்தலின் முடிவுகளைப்பற்றி உங்களுடைய பார்வை என்ன? சிங்கள மக்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?” என்று.