எல்லா கம்யூனிஸ்டுகளும் யூதர்களின் சேவகர்கள் அல்ல. ஆனால் யூதர்கள் இன்றி கம்யூனிசம் என்ற ஒன்றே அமைந்திருக்காது.

நாம் த‌மிழ‌ர் அல்ல‌து “நாம் நாஸிக‌ள்” க‌ட்சியின‌ரின் க‌ம்யூனிச‌ வெறுப்புப் பிர‌ச்சார‌ம்.‌ இது ஏற்க‌ன‌வே நாஸிக‌ளால் புனைய‌ப் ப‌ட்ட‌ பொய்ப் பிர‌சார‌ம். ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ள் விஷ‌ம‌த்த‌ன‌மாக‌ திரிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌.

// 1945-ல் ரஷ்யாவில் நடைபெற்ற யால்டா கான்பிரன்ஸ் நிகழ்வுக்குப் பிறகு அதில் கலந்து கொண்ட நிறைய கம்யூனிச முகமூடி கொண்ட யூதத் தலைவர்கள்தான் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் மேல் உலகளவில் சுமத்தப்பட்ட படுகொலை குற்றங்கள் காற்றில் விடப்பட்டது.

எல்லா கம்யூனிஸ்டுகளும் யூதர்களின் சேவகர்கள் அல்ல. ஆனால் யூதர்கள் இன்றி கம்யூனிசம் என்ற ஒன்றே அமைந்திருக்காது. Bolshevik கட்சியை உண்டாக்கியது முதல் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் 1945களுக்கு பிறகு தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது வரையில் மட்டுமல்லாது இஸ்ரேல் உருவானது வரை செல்கிறது சோவியத் யூனியனின் பங்களிப்பு.//
– உங்க‌ளில் ஒருவ‌ன் உஸ்மான் (நாம் த‌மிழ‌ர் க‌ட்சி)

போல்ஷேவிக் க‌ட்சியில் ஏராள‌மான‌ யூத‌ர்க‌ள் இருந்த‌து உண்மை தான். செம்ப‌டை த‌ள‌ப‌தி ட்ராஸ்கியும் ஒரு யூத‌ர் தான். ஆனால் அத‌ற்கான‌ கார‌ண‌ம் வேறு. அந்த‌க் காலத்தில் பெரும்பான்மை அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் யூத‌ர்க‌ளை ஒதுக்கி வ‌ந்த‌ன‌. வெளிப்ப‌டையாக‌வே இன‌வெறி பேசின‌. அத‌ற்கு மாறாக‌ போல்ஷேவிக் (க‌ம்யூனிஸ்ட்) க‌ட்சியில் ம‌ட்டும் தான் யூத‌ர்க‌ளுக்கு ச‌ம‌ உரிமை கொடுத்தார்க‌ள். த‌லைமைக்கு வ‌ர‌வும் அனும‌தித்தார்கள்.

ர‌ஷ்யாவின் நில‌வ‌ர‌த்தை இல‌ங்கையுட‌ன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். இல‌ங்கையில் பெரும்பான்மை சிங்க‌ள‌க் க‌ட்சிக‌ள் இனவெறி பேசி த‌மிழ‌ரை ஒதுக்கி வைத்த‌ன‌. ஆனால் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி ம‌ட்டும் ச‌ண்முக‌தாச‌ன் என்ற‌ த‌மிழ‌ரை த‌லைவ‌ராக்கும் அள‌விற்கு ச‌ம‌ உரிமை கொடுத்த‌து.

இர‌ண்டாம் உல‌க‌ப் போர் தொட‌ங்குவ‌த‌ற்கு ப‌ல‌ த‌சாப்த‌ங்க‌ளுக்கு முன்ன‌ரே ர‌ஷ்ய‌ யூத‌ர்க‌ள் பால‌ஸ்தீன‌த்தில் குடியேறி இருந்த‌ன‌ர். சார் மன்னராட்சிக் காலத்தில் நடந்த யூத இனப்படுகொலையில் உயிர்தப்பியவர்கள். அவ‌ர்க‌ள் “க‌ம்யூனிச‌ முக‌மூடி” அணிந்தவ‌ர்க‌ள் அல்ல‌. உண்மையாக‌வே கொள்கைப் ப‌ற்றுக் கொண்ட‌ க‌ம்யூனிஸ்டுக‌ளாக‌ இருந்த‌ ப‌டியால் கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ளை உருவாக்கினார்க‌ள். அங்கு இஸ்ரேல் என்ற‌ தேச‌த்தை உருவாக்கும் நோக்க‌ம் அவ‌ர்க‌ளுக்கு இருக்க‌வில்லை.

இஸ்ரேல் என்ப‌து சியோனிச‌ தேசிய‌வாதிக‌ளின் குறிக்கோளாக‌ இருந்த‌து. த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளின் குறிக்கோள் த‌மிழீழ‌ம் என்ப‌து மாதிரி. த‌மிழ‌ர்க‌ள் எல்லோரும் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் அல்ல‌. அதே மாதிரி யூத‌ர்க‌ள் எல்லோரும் சியோனிச‌ தேசிய‌வாதிக‌ள் அல்ல‌.

1945 ம் ஆண்டுக்குப் பின்ன‌ர், சியோனிச‌வாதிகள் அமெரிக்கா ம‌ற்றும் மேற்குல‌கின் உத‌வியுட‌ன் பெரும‌ள‌வு யூத‌ர்க‌ளை க‌ப்ப‌லில் அனுப்பி குடியேற்றினார்க‌ள். அத‌ன் விளைவாக‌ உருவான‌து தான் இஸ்ரேல்.

(Kalai Marx)