எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்(பகுதி – 2)

(அ. வரதராஜா பெருமாள்)

சுயசார்பு நிலையை அடைய முடியவில்லை

அடிப்படை வாழ்வுரிமைகளுக்கு உறுதியில்லை

‘இலங்கையானது ஒரு பலமான பொருளாதாரம் கொண்ட நாடாக இருப்பதற்குப் போதிய அளவுக்கு வயல் வளங்கள், வன வளங்கள், பல்வகை மண் வளங்கள் என நிலவளங்களையும் – அத்துடன், கடல் வளங்கள், நதிகள், ஏரிகள், குளங்கள் என பல்வகை நீர்வளங்களையும் கொண்டது. மேலும், நாட்டின் மத்தியிலே பரந்த பசுமையான மலைகள் அவற்றிலிருந்து எட்டுத் திசைகளிலும் நீரோட்ட நரம்புகளாய் நதிகள் பாய்கின்றன. உலகின் பெருந்தொகையான நாடுகளுடன் ஒப்பிடுகையில் பல்வேறு வகை விவசாய உற்பத்திகளையும் ஆண்டு முழுவதுவும் மேற்கொள்வதற்கு உரிய வகையில் இலங்கை மிகச் சாதகமான காலநிலைமைகளையும் கொண்ட நாடு.