எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 9)

(அ. வரதராஜா பெருமாள்)

இலங்கை அரசின் பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு அவசியமான வருமானத்தை திரட்டுவது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கடமை. அதனை நீதியான வரி வகைகள் வழியாக, மற்றும் வரிகளற்ற ஏனைய நியாயமான முறைகள் மூலமாக திரட்டுதலும் அரசாங்கத்தின் பொறுப்பான கடமையாகும். இவற்றை முறையாகவும் சரியாகவும் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த அத்தனை அரசாங்கங்களும் இப்போது பதவியிலுள்ள அரசாங்கமும் செய்யவில்லை. அதன் விளைவாக, இலங்கையின் தேசிய பொருளாதார சக்திக்கு உரிய அளவில் எந்தளவு விகிதாசாரத்தை அரச வருமானமாக அரசாங்கம் திரட்டியிருக்க வேண்டுமோ அதைவிட மிக மிகக் குறைவாகவே அரச வருமானம் இருக்கின்றது. இந்த விடயங்களை கடந்த தொடரில் அடையாளம் கண்டிருந்தோம்.