‘கஜேந்திரன்களின்’ எதேச்சதிகாரம்; முட்டுச்சந்துக்குள் முன்னணி

(புருஜோத்தமன் தங்கமயில்)

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”
இப்படி ஆரம்பிக்கும் நாட்டார் பாடலொன்று தமிழில் மிகவும் பிரபலமானது. கடுவெளிச் சித்தர் எழுதியது. “…நீ விரும்பி, காத்திருந்து பெற்ற ஒரு விடயத்தை, தவறான வகையில் பயன்படுத்தி, வீணாக்கிக் கொள்கிறாய்…” என்பதுதான் இந்தப் பாடலின் எளிமையான பொருள்.