கம்யூனிஸ்டுகள் சிந்தனைக்கு (!!!????)

கொஞ்சநாள் முன்புவரை காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது.

அப்போதும் இதே இந்திய வரலாற்றுக் கழகம் இருந்தது.

ரொமீலா தாப்பர் – இர்பான் ஹபீப் – பணிக்கர் என்று மார்க்சிய சிந்தனையாளர்கள் அதில் பொறுப்பேற்று நிரம்பி வழிந்தார்கள்.

அவர்களை கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்கள் என்பதற்காக – ‘வரலாற்றை திரித்து தமக்கு சாதகமாக எழுதுவதற்காக’ காங்கிரஸ் கட்சி நீக்கவில்லை.

ரொம்பப் பெரிய கதை வேண்டாம்.

இதோ இந்த ஜேஎன்யூ – டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையை எடுத்துக் கொள்ளுங்கள். அது நேற்றும் இன்றும் இடதுசாரிகளின் பட்டறையாக – உலைக்களனாக இருந்து வருகிறது.

அதை ‘காலி’ செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை.

ஆனால் காங்கிரசை மண்மூடவேண்டும் என்று என்னென்னவோ முடிந்தவரை செய்து முடித்தீர்கள்.

காங்கிரசுக்கு மாற்றாக விபி சிங் – முலாயம் – மாயாவதி – பஸ்வான் – சந்திரபாபு நாய்டு – லல்லு – கருணாநிதி – சரத் யாதவ் – தேவ கவுடா – ஜெயலலிதா – கெஜ்ரிவால் – குமாரசாமி – ராமசாமி என்று இந்தியாவின் சந்துபொந்துகளில் எல்லாம் தேடி ‘100%’ நல்லவர்களாக ‘நேர்மைத் திலகங்களாக ‘சேர்த்தும் பார்த்தீர்கள்.

காங்கிரஸ் போனால் பிஜேபி வரும் – பிஜேபி தான் வரும் என்று எக்மோர் ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தையைக் கேட்டால்கூட சொல்லிவிடும்.

ஆனால் உலகத்துக்கே ‘அறிவு’ சொல்லும் நீங்கள்….

இதோ பிஜேபியை உட்காரவும் வைத்துவிட்டு –

வரலாற்றுக்கு கழகத்தைக் குலைக்கிறானே…நேரு பல்கலையில் இப்படி அராஜகம் செய்கிறானே என்று கண்ணீர் வடிக்கும்போது….

நீங்கள் காங்கிரசை கீழே தள்ளியதுமல்லாமல் நாட்டையுமல்லவா குழி பறித்து குப்புறத் தள்ளி விட்டீர்கள்?

‘வரலாற்றுத் தவறுகளை’ இனி சொல்லி என்ன பயன் என்கிறீர்களா?

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானும் கெடும்.

சிபிஎம்மில் கொஞ்சம் ‘நம்பிக்கைப் புள்ளியாக’ யெச்சூரி தெரிகிறார்.

இந்தப்பக்கம் சிபிஐயில்….அய்யகோ….ராஜாக்கள்….

( ரதன்,

இனிமேல் அரசியல் எழுதுவியா? அரசியல் எழுதுவியா?….

சோலியப் பாரும்லே…. )