கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா.??? பாஜக வெற்றி பெறுமா.???

முன்பு இருந்த எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒரு காரியமாக திரு. நரேந்திர மோடி, தேர்தல் களத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் பதினைந்து பிரச்சாரத்தில் கலந்து கொள்ளப் போகின்றார். இதே தந்திரத்தைப் பயன்படுத்தி உத்திரப் பிரதேசத்தில் இருந்த சமாஜ்வாதி கட்சியினை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.
வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று தான் மோடி லோக்சபாவில் நுழைந்தார். அவருடைய இந்தி பேசும் திறமை எப்படி அவரை வெற்றியடையச் செய்ததோ அதே போல் அவருடைய கட்சியினரின் மதவாதக் கலவரங்களை உண்டாக்கும் போக்கும் அக்கட்சியினை இதுவரை வெற்றியடைய வைத்திருக்கும் காரணிகளாக காணலாம்.

தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்திலும் கூட மிகக் குறைந்த அளவான 7 தொகுதிகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை அமைத்திருக்கின்றது பாஜக. கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பு வரை சென்றுவிட்டுதான் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றார்கள். இது போன்றும் கர்நாடகாவில் நிகழ சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கின்றன.

குஜராத்தில் ஆளும் பாஜகவினரால் தேர்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்க இயலும். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
குஜராத்தின் புதல்வனாக மோடி பார்க்கப்பட்டாலும், கர்நாடகாவில் சித்தராமைய்யாவினைத் தான் மண்ணின் மைந்தனாக ஏற்றுக் கொள்வார்கள். குஜராத்தில், மோடி குஜராத்தி மொழி பேசி தன்னுடைய எண்ணங்களை மக்களுக்கு புரிய வைத்திட இயலும். ஆனால் கர்நாடகாவில் அவருக்கு மொழிப் பெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றார்கள். குஜராத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றியினை உறுதி செய்வதற்கான முகமாக நரேந்திர மோடி இருந்தார். ஆனால், கர்நாடகாவில் பாஜகவின் எண்ணங்களையும் திட்டங்களையும் வெளிப்படுத்தும் முகமாக திரு. எடியூரப்பா தான் இருக்கின்றார். பாஜகவினரின் மோடி அலை குஜராத்தில் நன்கு வேலை செய்தது.
ஆனால் கர்நாடகாவில் குறிப்பாக தெற்கு கர்நாடகாவில் அதற்கான சாத்தியக் கூறுகளே இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் சித்தராமைய்யா 2013 ஆம் ஆண்டு ஆட்சியினை அமைத்தார்.

தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்குடன்
தேர்தல் களத்திலும் அதே சாதுர்யத்தை பயன்படுத்தியிருக்கின்றார். ஜனதா தள் அணியினை பாஜகவின் கிளை அணியாக அறிவித்ததால் பாஜகவின் வாக்குவங்கி இரண்டாக பிளவுற்றது. மேலும், கன்னடமொழியினை எங்கும் பயன்படுத்துவதின் விளைவாக மோடி இதுவரை அவரின் பேச்சுத் திறமையால் உருவாக்கி வைத்திருந்த மோடி அலை சற்று பின்வாங்கியிருக்கின்றது. காரணம் மோடியின் இந்தி உரையானது, இந்தி மொழித்திணிப்பினையே உணர்த்துகின்றது. லிங்காயத்து மக்களை சிறுபான்மை மக்களாக அடையாளப்படுத்த இவர் எடுத்துக் கொண்ட முயற்சி பாஜகவின் வாக்கு வங்கியினை இன்னும் குறைத்திருக்கின்றது.

இன்னும் தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு ஆறு நாட்களே இருக்கின்றன .
மைசூர் மாவட்டத்தின் சாமுண்டீஸ்வரி தொகுதியிலும், பகல்கோட் மாவட்டத்தின் பதாமி தொகுதியிலும் நிற்கிறார் சித்தராமைய்யா.

சித்தராமைய்யாவின் மகன் யதிந்திர சித்தராமைய்யா வருணா தொகுதியில் நின்று போட்டியிடுகின்றார். 2+1 என்ற ஃபார்முலாவினை பயன்படுத்துவதாக சித்தராமைய்யாவை மோடி விமர்சனம் செய்திருக்கின்றார். பதிலுக்கு சுங்க ஊழல் மோசடியில் ஈடுபட்ட முக்கியமான கலிசோமசேகர ரெட்டி, கலிகருநாகர ரெட்டி இருவரும் எடியூரப்பாவும் இந்த ஃபார்முலாவிற்குள் அடங்குவார்கள் என்று கூறியிருக்கின்றார் சித்தராமைய்யா.

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 186 இடங்களுக்கு மேல் வெல்லும்
என நான் நம்புகிறேன்.
இந்த பதிவை பார்த்து சிரிக்கும் பாஜகவினர் மே 12 க்கு பின்பும் சிரிக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்நாட்டின் அம்மா உணவகத்தை காப்பி அடித்து ஏற்கனவே சித்தராமைய்யா.
இந்திரா உணவகத்தை
நடத்திக்கொண்டு இருக்கிறார்.

ஆனால் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் மலிவு விலையில் உணவகம் அமைப்போம் என ஏற்கனவே காப்பி அடித்த ஒரு திட்டத்தை மறுபடியும் காப்பி அடித்துள்ளார்கள்.

கை, காலை கட்டி போட்டு பாஜகவுக்கு ஒட்டு போட வைங்க னு எடியூரப்பா சொல்கிறார்.

தமிழனா இருந்தால் உடனே ஷேர் பண்ணு என்று முகநூல், வாட்ஸ் அப்பில் பதிவிடும் நமது திடீர் தமிழர்கள் போலவே

மோடியும் “நீ உண்மையான ஹிந்துவா இருந்தா பாஜக க்கு ஒட்டு போடு என் சொல்கிறார்.

நீ உண்மையிலேயே ஹிந்து என்றால் பாஜக க்கு மட்டும் ஒட்டு போடு மற்ற கட்சிகளுக்கு ஒட்டு போட்டால் நீ ஆன்டி ஹிந்து என ஒரு பிரதமரே பொறுப்பற்ற முறையில் சொல்லுகிறார்.
இதற்கு முன் இது போல தரமற்ற முறையில்
எந்த இந்திய பிரதமரும் பேசியதில்லை.

நான் காங்கிரஸையும் பாஜகவை யும் ஒரே தரமுள்ள கட்சிகளாகவே பார்க்கிறேன்.
இரு கட்சிகளையும் நான் ஆதரிக்கவில்லை.

பாஜகவை ஆதரித்தால் தான் எனக்கு இந்து என்னும் அங்கீகாரம், இந்தியன் என்னும் அங்கீகாரம் கிடைக்கும் என்றால் எனக்கு அப்படி ஒரு அங்கீகாரமே தேவையில்லை.
நான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமையும், பெருமிதமும் கொள்கிறேன்

நான் ஒரு இந்து என்பதும், இந்தியன் என்பதும் என் மனசாட்சிக்கு தெரியும்.

எனவே கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் …
ஆட்சி அமைக்க வேண்டும்…
என்பதே எனது கருத்து ஆகும்.

(இராமச்சந்திர மூர்த்தி.பா)