‘கறிவேப்பிலை அரசியல்’ கைகொடுக்காது

(மொஹமட் பாதுஷா)

இனங்களுக்கு இடையிலான உறவைக் கட்டியெழுப்புதல் என்ற விடயம், காலத்துக்குக் காலம் பேசுபொருளாகின்றது. தேர்தல், பேச்சுவார்த்தை, பேராட்டம் போன்ற ஏதாவது ஒரு நிகழ்வை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு, இவ்வாறான பேச்சாடல்களும் கருத்தாடல்களும் முன்வைக்கப்படுகின்றன.