காங்கிரஸும் பவாரும் வளர்ந்து தேய்ந்த கதை

பம்பாய் எப்போதுமே காங்கிரஸின் கோட்டையாகத்தான் இருந்திருக்கிறது. 1960-ல் மாநில எல்லை மறுவரையறைக் குழுவால் அது மகாராஷ்டிரமாகவும் குஜராத்தாகவும் பிரிக்கப்பட்டதற்கு வரலாற்றில் காங்கிரஸ் எதிர்ப்பாக இருந்துவந்திருந்தாலும், இப்பிரிவினை தேர்தல் முடிவுகளில் புதிய மாநிலங்களில் பெரிய தாக்கம் எதையும் உடனடியாக உண்டாக்கிவிடவில்லை. குறிப்பாக, மகாராஷ்டிரத்தில்!