கொரனாவும் சோசலிச நாடுகளும்

(Maniam Shanmugam)

தென் அமெரிக்க நாடான வெனிசூலா மீது அமெரிக்கா விதித்திருக்கும் கடுமையான பொருளாதாரத் தடை காரணமாக அந்த நாடு தனது நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இருப்பினும் அந்த நாட்டில் மார்ச் 12ஆம் திகதிவரை கொரனோ வைரஸ் பரவாதபடி அந்த நாட்டு அரசாங்கம் கவனமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.