கொரனா: சமூகப் பொறுப்பை மறந்து பயணிக்கின்றோமா…?

(சாகரன்)

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரனா வைரஸ் தனது கோரத்தாண்டவத்தை ஐரோப்பா எங்கும் பரப்பி தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றது. முதலில் ஆரம்பமான சீனா சமூகக் கட்டுப்பாட்டில் தனது கரங்களை இறுக்கப் பிடித்து, இதன் அவசியத்தை தனது மக்களுக்கு தெளிவுபடுத்தி, அங்கீகாரத்தை மக்களிடம் பெற்று, அவர்களிடம் சமூகப் பொறுப்பை உருவாக்கி இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருகின்றது.