கொரனா வைரஸ் இன் வீச்சு… ஏப்ரல் மாத நடுப் பகுதியில் அடங்க ஆரம்பிக்குமா……?

இதற்கு கொரனாவின் பாதிப்பு ஏற்பட்ட மகாணத்தின் செயற்பாட்டை உறை நிலைக்கு கொண்டு வந்து சமூகப் பரவலை தடுத்தல் என்ற அணுகுமுறையால் மேலும் பிரதேசப் பரவல் ஏற்படாமல் தடுத்தது சீன அரசு. மனிதருக்கு இடையேயான சமூக இடைவெளியை ஏற்படுத்தி அருகில் இருக்க வேண்டிய மக்களிடையே வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுத்தது என்ற அணுகு முறைகள் தனது கட்டுக் கோப்பான திட்டமிட்ட அரச இயந்திரங்கள் மூலம் செயற்படுத்தியது.

இச் செயற்பாடுகளை மேற்கொள்ள கூடிய அரச கட்டமைப்புகளையும், அரசு அதிகாரத்தையும், தூரநோக்கு பார்வையையும் சீன அரசு கொண்டிருந்தது. சிறப்பாக மக்கள் வெளியே வராமல் தொடர்ந்தும் வீட்டில் தங்கியிருப்பதற்குரிய உணவு, ஏனைய மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை அவர்களின் ‘கரங்களில்” விநியோகம் செய்தது. மேலும் தேவையான நிதி ஆதாரங்களை அவர்களின் வங்கிக் கணக்குளில் வெப்பிலிடும் அல்லது இதற்கு ஒத்த செயற்பாட்டையும் தாமதம் இன்றி செய்தது.

கொரனாவில் பாதிக்கப்பட் நேயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை வழங்குவதற்குரிய மேலதிக வைத்தியசாலைகள் இதற்கான உபகரணங்கள், முன்னிலை வைத்திய ஊழியர்களுக்குரிய பாதுகாப்பு கவசம் உட்பட்ட ஏனைய வசதிகளையும் தாமதம் இன்றி செய்து கொடுத்தது.

இதன் போதெல்லாம் சீனாவின் பொருளாதாரம் அடிவாங்கப் போகின்றது அல்லது பங்கு சந்தை விழப் போகின்றது என்பதை முன்னிறுத்தி மேற் கூறிய செயற்பாடுகளை தாமதப்படுத்வோ அல்லது செயற்படுத்தாமலோ இருக்கவில்லை சீன அரசு.
மக்களை இந்த வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றுவது இதனையும் மீறி தொற்றலுக்கு உள்ளானவர்களை மருத்துவ கவனிப்புகள் மூலம் குணமாக்குதல் என்ற இரு விடயங்களே அவர்களின் வேலை அட்டவணையில் இருந்த விடயங்கள் ஆகும்.

மருத்து சிகிச்சையிற்கு பலரும் எதிர்பார்க்காத ஆனால் இந்த பத்தி எழுத்தாளர் போன்றவர்கள் எதிர்பார்த்த கியூப நாட்டு மருத்து தொழில் நுட்பத்தை, ஆளணியை முழுமையாக பாவித்துக் கொண்டது. இதனால்தான் பெப்ரவரி 3 வது கிழமையில் இந்த நோய் தொற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடிந்தது.
தொடர்ந்த ஒரு மாதம் வரை அதாவது மார்ச் 3வது கிழமை வரை தொற்று மேலும் வீரியம் பெறுகின்றதா என்பதை அவதானிக்கும் காலமாக நிர்ணயம் செய்து அவதானிப்பில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக உலகிற்கும், தனது நாட்டு மக்களுக்கும் அறிவித்து உறைநிலையில் இருந்த அந்த மாகாணத்தை செயல் நிலை மகாணமாக்கி இன்று ‘வெற்றி” நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த கொரனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்து ஏனைய உலக நாடுகளுக்கு பரவியதாக புள்ளி விபர ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாகாணத்தில் இருந்து உலகமயமாக்கல் என்ற வியாபார பொறிமுறை உககெங்கும் விமாணப் பயணங்கள் மூலம் பயணம் செய்தவரகளால் காவிச் செல்லப்பட்டன.

மற்றய நாடுகளில் இதன் ஆரம்பம் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்து மார்ச் மாதம் நடுப்பகுதி வரை மெதுவாக பரவியது. மார்ச் நடுப்பகுதியில் இருந்து இன்று வரை அது தனது வீரியத்தை காட்டி காட்டாறு போல் பயணித்துக் கொண்டும் இருக்கின்றது. சீன அனுபவங்களின் படி அதன் காட்டம் ஏப்ரல் நடுப்பகுதியில் தனது வீரியத்தை குறைத்துக் கொள்ளும் சூழ்நிலைக்குள் வந்து விடும் அல்லது அவ்வாறு வரப்பண்ணலாம் என்பதே நாம் வரக்கூடிய முடிவு.

ஆனால் சீனா கொரனாவை கட்டிற்குள் கொண்டு வர எடுத்துக் கொண்ட நடைமுறைச் செயற்பாடுகளை நாம் அதன் அனுபவங்களில் இருந்து பாடங்களாக எடுத்துக் கொண்டு செயற்பட்டால் இது சாத்தியம் ஆக்க முடியும்.

எல்லா நாடுகளும் தற்போது இது போன்று செயற்படுகின்றோமா என்றால் இல்லை என்பதே பதில். ஆரம்பத்தில் இது சீன வைரஸ் என்றும் இதன் தாக்கம் சீனாவிற்கு மட்டுமே என்று எமக்கில்லை என்ற அலட்சியமாக இருந்தது முதல் காரணம். இரண்டாவது தத்தமது நாடுகளில் இது காட்டாற்றாக பாய்ச்ச்ல அடிக்கும் வரை பொரளாதாரம், பங்கு சந்தை சுட்டி அல்லது ஜிடிபி அடிபட்டுப் போகும் என்று கடதாசிப் பொருளாதாரத்தை முன்னிறுத்தி தமது நாடுகளை முழுமையாக அல்லது பகுதியாகவேனும் உறங்கு நிலைக்கு கொண்டு வரத்தயார் நிலையில் இருக்கவில்லை.

இதனால் வைரஸின் தாக்கம் சமூகப் பரம்பல் என்ற நிலையிற்கு வேகமெடுத்து கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையினை அடைந்து. இதன் உச்சத்தை இன்று நாம் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஸபெயின், இத்தாலி வரை கண்டு வருகின்றோம். இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகளில் சில் விசேட நிலமைகள் இருந்தன என்பதுவும் உண்மை.

ஆரம்பத்தில் பொருளாதாரம் என்பதை மட்டும் முன்னிறுத்தி மக்கள் நலன்களை இரண்டாவதாக பார்த்திருந்த இந்த நாடுகள்; தொற்று நேயாளிகளும், மரணங்களும கட்டு மீறிய நிலையிற்கு அதிகரித்த பின்பு பொருளாதாரத்தை தாங்குதல் என்பதை பின்தள்ளி மக்கள் நலன் என்பதை முன்னிறுத்தி செயற்பட தொடங்கியிருக்கின்றன. இதற்கு விதி விலக்காக நமது கண்களுக்கு தெரியும் நாடு அமெரிக்கா.

ஏப்ரல் நடுப்பகுதியில் வைரஸின் செயற்பாட்டை கட்டிற்குள் கொண்டு வர முடியுமா…? இல்லையா…? என்பது அந்தந்த நாடுகளின் செயற்பாடடை பெறுத்தே முடிவாகப் போகின்றது. இதில் சீன அனுபவங்களை நாம் பாடங்களாக கொண்டால் ஏப்ரல் மாத நடுப்பகுதியுடன் கொரானா தனது தோல்வியை ஒத்துக் கொண்டு மெதுவாக ஓதுங்கத் தொடங்கும் அன்றேல்……?

ஏன் சில நாடுகளில் கொரனா வைரஸ் இன் தொற்றுதல் குறைவாக அல்லது கட்டிற்குள் இருக்கின்றது. இந்நாடுகள் விமானப் பயணங்கள் மூலம் அதிகம் இணைக்கப்படாத ‘வறிய’ நாடுகளாக இருப்பது முதன்மைக் காரணம். மற்றயது வைரஸ் தொற்று ஏற்பட்ட போது இதனைத் தடுத்து நிறுத்த அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் அது ஊரடங்கு,

வாழ்வியல் அடிப்படையில் மூன்றால் உலக நாடுகள் வறிய நாடுகள் எனஅறியப்பட ஆபிரிக்க தென் அமெரிக்க ஆசிய நாடுகளில் (இதில் சில நாடுகள் நீங்கலாக) நோய் எதிர்பு சக்திகளை மக்கள் தன்னகத்தே கொணடிருப்பதினால் கொரனா வைரஸ் இன்தாக்கம் வெயில் தெரியவரவில்லை அது தனது இறுதிக்கட்டமான நுரையீரைலைத்த தாக்கி மூச்சுத் திணறலை ஏற்படுத்தியிருக்காது என்ற விடயத்தையும் நிராகரிக்க முடியாது

மருத்துவம், ஏனைய மக்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள் என்பன பேரிடர் காலத்திற்கு ஏற்ப சிறப்பாக அமைந்திருந்தன என்பதுவாகும். இதில் கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை குறிப்பிடலாம். சில குறைபாடுகள் இருப்பனும் பொதுப் போக்கில் இந்த நாடுகள் சிறப்பாகவே செயற்படுகின்றன.

மேலும் இடதுசாரித் சிந்தனைப் போக்கும், ஜனநாயகப் பண்புகளும் அதிகமாக உள்ள நாடுகள் ஏற்கனவே தமது நாட்டு மக்களின் இயல்பான வாழ்க்கை முறையில் பரபரப்பு அற்ற, இயற்கையை அனுசரித்த வாழ்க்கை முறையினை கொண்டிருப்பதினால் இயல்பாகவே இப்படியான வைரஸ்கள் சமுதாய பரம்பலுக்கான வாய்புகளை அரிதாகவே அங்கு கொண்டிருப்பது முக்கிய காரணி ஆகும்.

கூடவே இந்த நாடுகளில் ஏற்கனவே கியூபாவின் மருத்துக் குழுக்கள் தமது சேவைகளை ஆண்டாண்டுகளாக செயற்படுத்தி வருவதும் காரணமாக இருக்கின்றன. ஆனால் இது பிரபல்யப்படுத்தப்படாமல் இருக்கின்றன. இவை சிறப்பாக மத்திய, தென் அமெரிக்க, ஆபிரிக்க நாடுகள் ஆகும்.

வைரஸ் இன் இயல்பான மெதுவாக ஆரம்பித்து வீரியம் அடைந்து பின்பு தணிந்து போதல் என்ற மருத்துவக் விஞ்ஞான அடிப்படையில் என் அவதானத்தின் படி கொரனா மெதுவாக ஆரம்பித்து ஒரு மாதம் வீரியம் பெற்று மற்ற ஒரு மாதத்தில் காட்டாற்று வேகம் பெற்று பின்பு மெதுவான தணிதலை ஆரம்பிப்பதாக அறிய முடிகின்றது. இந்த பொது போக்கை நிலை நிறுத்த, செயற்பாட்டுடையதாக்க சீனா கடைப்பிடித்த முறையினை நாம் கையாள வேண்டும் என்பது இங்கு முக்கிய விடயமாகின்றது.

இச் செயற்பாடு சீனாவின் வெற்றி பெற்ற செயற்பாடு என்பதற்கு அப்பால் பொது இடை நடுவான சாத்தியமான பல நாடுகளுக்கும் பொருந்தும் நடைமுறையாக இருப்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.

இங்கு தென்கொரியா, சிங்கப்பூர் கடைப்பிடித்த முறைகள் மிகச் சீக்கிரத்தில் வைரஸ் ஐ கட்டிற்குள் கொண்டு வந்திருந்தாலும் இதனை பல நாடுகள் கடைப்பிடிப்பதல் நடைமுறைச் சாத்திமற்ற விடயங்கள், வளங்கள் பலவேறு நாடுகள் கொண்டிருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
கூடவே வைரஸ் இன் இயல்பான தானாக வீரியத்தை குறைத்துக் கொள்ளுதலுக்கான கால அவகாசம் தென்கொரிய, சிங்கப்பூர் நாடுகளின் வேகச் செயற்பாட்டு அணுகு முறையில் போதியளவு இருக்கவில்லை என்பதுவும் கருத்தில் கொள்ளபட்ட வேண்டும்.

இங்கு குறிப்பிட்ட பிரதான (சீன மொடல்) நடைமுறைகளை நாம் பின்பற்றாவிட்டால் கொரனாவின் தொற்று ஒரு தொடர் கதையாக ஏப்ரல் நடுப்பகுதியைத் தாண்டியும் வீரியமாக செயற்பட வாய்ப்புகளை மறுக்க முடியாது

(பத்தி எழுத்தாளர் மருத்துவத் துறையில் துறைசார் கல்வியை கற்காதவர் என்பதையும் பதிவு செய்கின்றார்)