சிறுவர் மனத் துஷ்பிரயோகம்

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பணியாற்றிய மன நல வைத்தியரான கலாநிதி.தயா சோமசுந்தரம் புலிகள் அதிகமாக விடலைப் பருவத்தினரை தமது இயக்கத்தில் சேர்த்ததை குறிப்பிட்டு ; 11 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து 15 வயதில் நான்கு வருடங்களாக புலிகளிலிருந்து “போராடிய” ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் பற்றி ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையாளருக்கு (The Independent) குறிப்பிட்டதை சாதாரணமான உதாரண சம்பவமாக கொள்ளமுடியாது.

“தனது நண்பர்கள் பலரை இழந்த ஒரு தாக்குதலின் பின்பு அவனுக்கு பெண்களும் குழந்தைகளும் கொலை செய்யப்பட்ட வீடியோ ஒன்றினைக் காண்பித்து அக்கொலைகளை அவனது எதிரிகள் செய்ததாக சொல்லப்பட்டது” அவ் விடலைப் பருவத்தினன் ஒரு சிங்கள கிராமத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டான்.

அவன் எவ்வாறு மக்களை கொன்றான் , எவ்வாறு ஒரு சிறு குழந்தையை அதன் கால்களை பிடித்து அக்குழந்தையின் தலையை சுவரின் மீது வீசி அடித்துக் கொன்றான், அப்போது அந்தக் குழந்தையின் தாய் கதறி அழுததை பார்த்து எவ்வாறு சந்தோசப்பட்டான். அதன் பின்னர் அவனது தோழர்கள் அவனை கட்டுப்படுத்துவதை கடினமாக கண்டார்கள். அவன் திருமண விழாக்களில் கோவில் உற்சவங்களில் மக்கள் சந்தோஷமாக இருப்பதை காணும்போது அவன் ஆத்திரமும் அவமதிப்பும் கொண்டான்.” என்றும் தனது வைத்திய அனுபவத்தை குறிபிட்டிருந்தார்.
(தோழர் பஷீர் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றில் : அவன் எவ்வாறு மக்களைக் கொன்றான் )