சுவாமி ஞானப்பிரகாசரின் மறுபக்கம்

(Maniam Shanmugam)

யாழ்ப்பாணத் தமிழர்களின் புனித பூமியான நல்லூர் இரண்டு பெரியார்களை தமிழுக்கு அளித்தது என நம்மவர்கள் பெருமை பேசுவதுண்டு. அவர்களில் ஒருவர் ஆறுமுகநாவலர் (1822 டிசம்பர் 18 – 1879 டிசம்பர் 05). அவரது இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை.