செய்தியின் பின்னணியில்

நான் படித்த சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு புதிய மாடிக் கட்டடம் கட்ட 57 மில்லியன் ரூபாவை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஒதுக்கியுள்ளதாகவும் அந்த கட்டிட திறப்புவிழாவுக்கு தான் வருவேன் என கூறியுள்ளதாக செய்திகளில் படித்தேன்.அது எனது பாடசாலை என்பதில் எனக்கு பெருமைதான்.

அண்மையில் குச்சவெளி பிரதேசத்தில் பல்லவக்குளம் என்னும் பகுதியில் பாடசாலை ஒன்று கட்டிடம் இன்றி இயங்குவதாக அருண் ஹேமசந்திரா என்ற நண்பர் படங்களுடன் போட்டிருந்தார்.அந்த ஊரிலும் நான் வாழ்ந்திருக்கிறேன்.படித்திருக்கிறேன்.இதைப் படித்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.
பொதுவாகவே யாழ்ப்பாணம் கல்வி வளம் நிறைந்த பிரதேசம்.ஏறக்குறைய சகல பெரிய பாடசாலைகளும் பலமான பொருளாதார பினனணியைக் கொண்டவை.இந்த வகையில் எனது சாவகச்சேரி இந்துக் கல்லூரியும் வளமான கல்லூரி.
பல பாடசாலை அதிபர்கள் கட்டடங்கள் கட்டுவதை விரும்புகிறார்கள்.இது சேவை நோக்கம் அல்ல.தமது பெயர்களை பதிய வைக்கும் நோக்கம்.க.பூரணம்பிள்ளை ஹாட்லிக் கல்லூரி,சென்.ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றை கல்வித்
தரத்தால் மேல் உயர்த்தினார் .ஒறேற்றர் சுப்பிரமணியம் ஸகந்தாவை அப்படி உயர்த்தினார்.ஒரு கிராம்ப் பாடசாலையை நகரப் பாடசாலைகளுக்கு இணையாக வளர்த்த பெருமை ஒறேற்றர் அவர்களையே சாரும்.
நகர்ப்புற பாடசாலைகளின் மிதமான வளர்ச்சி இப்போது கிராம்ப் புற பாடசாலைகளை சேதப்படுத்துகிறது.இது மத்தியதர படித்த வர்க்க குடும்பங்களுக்கும் பணக்கார குடும்பங்களுக்கும் இனிப்பாக இருக்கலாம்.ஆனால் ஏழை மக்களுக்கான கல்விக்கு இடையூறாகவே அமையும் என்பதை கல்வித்துறை சார்ந்தவர்கள் சிந்திப்பது இல்லை.கிராமப்புற பாடசாலைகள் செயலிழந்து போனால் மீண்டும் ஏழைகள் அடிப்படைக் கல்வியை இழக்கும் அபாயம் உண்டாகும்.
1972 ஆம் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் கொழும்பு,யாழ்ப்பாணம்,கண்டி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய மாறுதல்களை உருவாக்கியது.அந்த ஊர்களில் உள்ள பாடசாலைகளில் படித்தே பலர் பல்கலைக்கழகம் போனார்கள்.ஆனால் இப்போது எல்லா நகர பாடசாலைகளும் கிராமப்புற பாடசாலைகளை அரத்தமற்றதாக்குகின்றன.
ராதாகிருஷ்ணன் யாழ்ப்பாணமக்களின் கரகோசத்தை வரவேற்பை எதிர்பார்க்கிறார்.இந்த நிதியை வசதியற்ற பிரதேச பாடசாலைகளுக்கு ஒதுக்கினால் பல ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்க வசதியாக இருந்திருக்கும்.எல்லா வளங்களையும் வளமான நகர்ப்புற பாடசாலைக்கு ஒதுக்குவது அநியாயமானசெயலாகும்.இந்த நிதியை வன்னிப் பிரதேசம்,அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமப்புற பாடசாலைகளுக்கு ஒதுக்கி இருந்தால் மிக பயனுள்ளதாக இருந்திருக்கும்.
பெரிய பாடசாலைகள், அளவுக்கு அதிகமான மாணவர்களை உள்வாங்குவது நிறுத்தப்படவேண்டும்.மேலும் சிறுவர்கள் கண்டிப்பாக அருகில் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் படிப்பதே நல்லது.பிள்ளைகளுக்கு பாதுகாப்பு.பெற்றோருக்கு செலவு குறைவு.
பல பாடசாலைகள் தேவையற்ற விழாக்கள்,தேவையற்ற செலவுகளை உள்வாங்குகுன்றன.இதனால் ஏழைப் பெற்றோர்களின் அவஸ்தைகள் தாங்கமுடியாது.இப்படிப்பட்ட பாடசாலைகளுக்கு மேலதிக நிதிகள் தேவை இல்லை.
என்னுடைய இந்தப் பதிவு பலருக்கு கசப்பாக இருக்கலாம்.ஏனெனில் முகப் புத்தக நண்பர்கள் அதிகமானோர் மத்தியதர வர்க்கம்.நகரை நோக்கி படையெடுத்த குடும்பத்தவர்கள்.
அரசு நிதி பன்முகப்படுத்தப்பட்ட நிதி.எங்கே தேவையோ அங்கேயே ஒதுக்கவேண்டும்.பயன்படவேண்டும்.சிலர் மாலைகளுக்காகவும் வரவேற்புக்காகவும் தேவையற்ற இடங்களுக்கு ஒதுக்கப்படக்கூடாது
அரசியல்வாதிகளும் கல்வித்துறை சார்ந்தவர்களும் சிந்திக்க வேண்டும்.

  • Vijay Baskaran

ஆனால் வட மகாண கல்வி அமைச்சர் கல்வியற்கான வளங்கள் குறைவாக இருப்பதற்கான தீர்வாக நீங்கள் கூறும் வசதியற்ற புற நகர் பாடசாலைகளை பூட்டிவிட்டு இருக்கும் வளங்களை நகர் புறத்து மத்தியதர வசதி படைத்த மாணவiர்கள் கல்வி கற்கும் பாடசாலையிற்கு குவியப்படுத்த வேண்டும் என்று 1984 களிலேயே போர்காலத்தில் டெல்லி நேரு பல்கலைக் கழகத்தில் கல்விகற்ற தனது வசதி நலமையை கருத்தில் கொண்டு அறிவித்துள்ளாரே. கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் முன்னாள் தோழரை – Saakaran