சொற்பனம் கண்டோம்…..?

பொன்சேகாவை ஆதரிக்கும் போது சுரேஷ் அவர்களும் சேர்ந்து முடிவு எடுத்தார்.

பின்பு கயேந்திரகுமார் பிரிந்த போது ஆசன பங்கிட்டு பிரச்சினை என்று சுரேஷ் அவர்கள் யாழ் பல்கலைக்கழகம் வந்து வகுப்பு எடுத்தார். அந்த நேரம் ஒற்றுமை பற்றி அதிகம் பேசினார்.

தேர்தலில் மக்கள் நிராகரித்த போது தேசிபட்டியலில் பங்கு கேட்டார். கிடைக்கவில்லை.

பின்பு பேரவையை உருவாக்க வேண்டும் என்று கதைத்து அதையும் உருவாக்கினார்கள் பலருடன் சேர்ந்து. அது பிசுபிசுத்தது போக பிரிய வேண்டும் என்ற முடிவிற்கு வந்தனர் .

ஆனால் ஒருகாலத்தில் பிழையாக தெரிந்த கயேந்திரகுமாருடன் கூட்டு சேரவேண்டிய நிலை இன்று இந்த கூட்டு தென்னிந்திய தேர்தல் கூட்டுக்களை போன்றது .

தமிழர்களிற்கும் எதிர் துருவ அரசியல் தேவை ஆனால் அந்தளவிற்கு சாதிக்க பலம் இருக்கிறதா?

சரி தேர்தல் கூட்டுக்குழுவிற்கு என்ன பெயர்?
யார் தலைவர் ?
தீர்வு யோசனை என்ன தமிழிழமா?
சொற்பனம் கண்டேன்
Rajeevan