தனித்துவம் மிக்க தேசிய கொடி

(என்.மிருணாளினி)

சுதந்திர தினமான இன்று, எமது தேசிய கொடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த எமது தேசத்துக்கு, 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் கிடைத்தது. அடிமைத்தனத்தில் இருந்து எமது தேச மக்களுக்கு விடுதலை கிடைத்தது. அன்றைய தினம் தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. எமது மக்கள் அனைவரும் தேசிய கொடியைத் தம் வீடுகளிலும் வேலைத் தளங்களிலும் பொது இடங்களிலும் பாடசாலைகளிலும், பறக்கவிட்டு மரியாதை செய்கின்றனர்.