தமிழ் அரசியலில் திட்டமிடல், தூரநோக்குக்கான தேவை

(என்.கே. அஷோக்பரன்)

உலகத்தையே, ஏறத்தாழ ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக, ‘கொவிட்-19’ பெருந்தொற்று ஆட்டம் காணச் செய்துகொண்டிருக்கிறது.  ‘கொவிட்-19’ இன் கோரமுகத்தை, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையில், இலங்கை வாழ் மக்கள், ஆரோக்கிய ரீதியான சவாலை மட்டுமல்ல, வாழ்வாதார ரீதியான சவாலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கொவிட்-19’ வெறும் பெருந்தொற்று நோய் மட்டுமல்ல; அதன் விளைவுகள், இந்நாட்டின் உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் தள்ளாட்டம் காணச்செய்துள்ளது.