தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதிர்ந்தும் உதிராமலும் தனது நடையைக் கட்டுகின்றது.

(சாகரன்)

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பிரம்மா நான்தான் என்று தாராக்கியின் ஆவியில் இருந்து ஆரம்பித்து விக்னேஸ்வரனின் உறவினர் நிர்மலன் வரை உரிமை கொண்டாட இதற்கான ஆவணங்களைச் சமர்பித்து பத்தி எழுத்தாளர்கள் பலரும் எழுத ஆரம்பித்திருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதிர்ந்தும் உதிராமலும் தனது நடையைக் கட்டுகின்றது. உண்மையில் இதன் உருவாக்கம் புலிகளினால் நடைபெற்றது என்பதே உண்மையாக இருக்க முடியும். புலிகளின் பினாமிகள் பலர் தம்மை புலிகளின் ‘நல்லவேன்டா’ என்று விசுவாசிகளாகவும் அவர்களின் மீட்போராகவும் காட்டிக் கொள்ள எடுக்கும் பிரயத்தனங்களே இந்த உரிமை கோரல்கள் ஆகும் அன்றும் இன்று. அல்லது தாம் தான் புலிகளின் பாலசிங்கம் என்று காட்ட முயலும் செயற்பாடுகளின் வெளிப்பாடுகள் இவை.

ஒட்டுமொத்தமாக இதில் ஆரம்பத்தில் இணைந்தவர்கள் புலிகளின் ‘கொடுப்பனவு’ இல் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு ஏனையோரைக் காட்டியும் கொடுத்து சிறப்பு பட்டம் பெற்றவர்கள். முள்ளிவாய்கால் இறுதிக் கட்டத்தில் உடையார்கட்டை தாண்டி இலங்கைப் படை முன்னேறிய போது புலிகள் மிக அதிகமாக மக்களை கேடயங்களாக பிடித்தவண்ணம் பின்னேறிய போது ‘மக்களை கேடயங்களாக வைத்திருக்காதீர்கள்’ என்று கோரிக்கை விடாமல் மக்களைக் காப்பாற்ற எந்த பிரயத்தனமும் எடுக்காமல் புலிகளை மட்டும் காப்பாற்ற இந்தியா வரை பணப் பெட்டி காவியவர்கள் இவர்கள். இதற்கு விதிவிலக்காக சங்கரியர் இருந்தார் என்பது இன்று வயது முதிர்ந்த நிலையில் ஒரு ஓரமாக தனது அரசியலைச் செய்யும் அவருக்கு மட்டுமே பொருந்தும்.

இதன் உருவாக்கம் செயற்பாடுபற்றி உண்மையான செய்தி எனறு பார்த்தால் அது யாழ்பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை ஆவணம் ஒன்றையே எடுத்துக் கொள்ளலாம். தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்திற்கும் மேலாதிக்கத்திற்கும் வழி வகுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதயம் என்றால் மிகையாகாது. முக்கிய தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரஸ்காரர் களின் தோல்வியை தொடரந்து தொடரந்தும் வெற்றிகளைக் குவிக்க உருவான வட்டுக் கோட்டடைக் கூட்டும் வில்லன் நடிகைர் வீரப்பாவின் வசன நடையில் அமைந்த  ‘அடைந்தால் தனிநாடு அன்றேல் மரணதேவி’ என்று தனிநாட்டுப் பிரகடனம் செய்து 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும் தொடர்ந்த ஜேஆர் அரசுடனான சமரசமும் இவர்களை மீண்டும் மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்படுத்தி ஆயுதப் போராட்ட அமைப்புக்களை முன்னுக்கு கொண்டு வந்ததே உண்மை வரலாறு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  உருவாக்கியவர்கள் புலிகள். இதற்கு ‘ஒத்து’ உழைத்தவர்கள் சுரேஷ் செல்வம் ஆனந்த சங்கரி. தன்னையும் அழைப்பார்கள் என்று எதிர்பார்புடன் இருந்தவர் சித்தார்தன். இதனை அவரே தன்னோடு நெருங்கிப் பழகியவர்களிடம் கூறியும் இருக்கின்றார். ஆனால் புலிகள் இருக்கும் வரை புளொட்டடை இணைக்க விரும்பவில்லை எல்லாம் உமாமகேஸ்வரன்இ ஜோதீஸ்வரன் பிரபா. இராகவன் கூட்டில் உருவான  பாண்டிபஜார் வரலாறே காரணம். உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஆரம்பம் முதலே ஆனந்தசங்கரி மாத்திரமே சுயாதீனமாக தனது கருத்துக்களை புலிகளுக்கு எதிராகவும் சம்மந்தன் போன்றவர்களின் தலையாட்டல்களுக்கும் தனது விமர்சனங்களை முன்வைத்து  இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்

இதனைத் தொடர்ந்து  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ தமிழர் விடுதலைக் கூட்டணி புளொட் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் என்பன இணைந்து உருவாக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக செயற்பட்டுவந்தனர். சில தேர்தல்களிலும் பங்கு பற்றினர். மத்திய அரசாங்கத்துடன் சரணாகதி அரசியலையும் இவர்கள் நடத்தவில்லை. மாறாக புலிகளுக்கு சேவகம் செய்யவும் விரும்பவில்லை.  ஆனால் மக்கள் இவர்களுக்கு போதிய தேர்தல் வெற்றி ஆதரவை வழங்கவில்லை. தேர்தல் வெற்றி கிடைக்காத சூழலில் தேர்தல் வெற்றிக்காக பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தனித்து விட்டு புளொட் ஆனந்தசங்கரி போன்றோர் புலிகளின் அழிவிற்கு பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தனர். ஆனாலும் சங்கரியர் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியின் சிறப்பாக சம்மந்தன் மாவையின் மேலாதிகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் எதிர்த்து கேள்வி எழுப்பி காணாமல் ஆக்கப்பட்டார். இதனை அவர்  கூட்டமைப்பிற்குள் இருந்த போதே செய்தார் . அப்போது மற்றயவர்கள் மௌனமாகவே இருந்தனர் பின்பு சங்கரியர் வெளியேறினார்.

இன்று வரை விடுதலை அமைப்பினர் தமக்கிடையே புலிகளின் மேதகு தன்மையை தவிர்த்து ஒரு பலமான இடதுசாரிய ஜனநாயக கூட்டமைப்பை உருவாக்கவில்லை. இதில் பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் இனர் மட்டும் தொடர்ந்தும் இதற்காக உழைத்து வருகின்னர் முதல் முயற்சி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ அடுத்து தமிழ் மக்கள் அரங்கம் பின்பு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி தோழமையை வளர்த்து  வலுவாக்க தோழமை தினம் என்று ஐக்கிய முன்ணிக்கான முயற்சிகளை முன்னெடுத்தனர் இதில் எல்லாம் குறிப்பாக சுரேஷ் ஏன் தேவாவும் அதிகம் ஒத்துழைத்ததாக தெரியவில்லை. கூடவே ஈபிஆர்எல்எவ் என்ற சொற்பதம் பலரையும் சங்கடப்படுத்தும் நிலையில் பெயரை தமது பேராளர் மகாநாட்டில் மாற்றியமைத்து இன்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியாக்கி தொடர்ந்தும் ஐக்கிய முன்ணியிற்காக உழைத்தும் முயன்றும் வருகின்றனர். தமிழ் மக்கள் சூழலில் வலதுசாரித் தலமைத்துவத்திற்கு மாற்றீடான இடதுசாரித் தலமைத்துவத்தை முன்னுக்கு கொண்டுவருதில் இன்று வரை நிலமைகள் பின்னிலையிலேயே இருக்கின்றன.

மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இற்குள் தங்கள் பிரநிதித்துவம் மதிக்கப்படவில்லை என்பதற்கு மாற்றீடாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் 40 வருடங்களாக எந்த பங்களிப்பும் செய்யாத விக்னேஸ்வரனையும் பொன்னம்பலத்தாரின் வாரிசு கஜேந்திரனையும்இ மற்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தள்ளி வைக்கப்பட்ட கஜேந்திரனையும்  இணைத்துக்கொண்டு புதிய கூட்டணி அமைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏன் தமிழரசுக் கட்சியை எதிர்கொள்ள தயாராகி வரும் இன்னொரு வலதுசாரிச் செயற்பாடுகளை நாம் காண முடிகின்றது. வரும் தேர்தல்களில் இந்த இரு வலதுசாரி செயற்பாட்டாளர்களிடையேதான் மக்கள் அல்லாடப் போகின்றார்களா…? அல்லது ஒரு இடதுசாரி தன்மையுடைய கூட்டை ஜனநாயக சக்திகளுடன் இணைந்து உருவாக்கி மக்களுக்கான அரசியலை வழங்க முன்னோக்கி நகரப் போகின்றார்களா என்பதே தற்போதைய கேள்வியாகும். இதில் நிலமைகளை மாற்றியமைக்கக் கூடிய செயற்பாடாளர்கள் யார் யார் என்பதை நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆனாலும் ஈபிடிபி இன் தேவானந்தாவிற்கும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

இருக்கின்ற நிலமைகளின் அடிப்படையில் சிறீதரன் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி இடதுசாரித் தலமைத்துவத்திற்கான ஐக்கிய முன்ணியை அமைப்பதற்கான முன்னெடுப்பகளை ஏனைய இடதுசாரி ஜனநாயக சக்திகளுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது முற்போக்கு புத்திஜீவிகளும் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துக் கூறிவரும் ஊடகங்களும் இதற்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி நிற்கவேண்டும். முன்னாள் போராளிகள் அமைப்பில் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகள் முரண்பாடுகளைப் பேசித் தீர்பது உடன்பாடுகளில் இணைந்து வேலை செய்தல் என்ற உண்மையான ஐக்கிய முன்னணி செயற்பாட்டில் இணைந்து வேலை செய்யவேண்டும். இதில் நான் ‘பலமானவர்’ மற்றயவர்கள் ‘பலவீனமானவர்’ என்பதை ஒரு புறம் தள்ளிவிட்டு மக்களுக்கான கூட்டுத் தலமையை ஏற்படுத்த முன்வரவேண்டும்.

Nov 16, 2017