தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள்

ஜெனீவாத் திருவிழா, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதே பத்தியில் சில காலத்துக்கு முன்னர் சொன்னது போல, ‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு ‘அடுத்த ஜெனீவா’ பதிலாகக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தின் பெயரால், இன்னமும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதற்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.