தரப்படுத்தல்: பார்க்கத் தவறிய பக்கங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 13

தமிழர்கள் மத்தியில், தரப்படுத்தல் ஓர் எதிர்வினையை உருவாக்கியதன் பின்னால், வலுவான காரணங்கள் இருந்தன. தரப்படுத்தல் வெறுமனே, 1970ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகளின் விளைவு மட்டுமல்ல! இதற்கான, நீண்டகால சமூகக் காரணிகள் பலவுண்டு.