தறிக்கப்பட்ட கிளைகளும் சாய்ந்துபோன ஓர் ஆலமரமும்

எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொருவரின் வளர்ச்சிக்குப் பின்னாலும் ஆசிரியர்கள் இருந்தே ஆகவேண்டும். அவ்வாசிரியர்களின் அர்ப்பணிப்பை, பெறுமதியை மதிப்பிடவே முடியாது. தங்களை வருத்தி, ஒவ்வொரு சமூகத்திலும் நற்பிரஜைகளை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள்.