திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி வரலாறு

(Kanniappan Elangovan)

1970 லிருந்து அரசியல் தளத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் இன்று அஇஅதிமுகவை பாஜக முற்று முழுதாக விழுங்கியதைப் பார்த்தால்…. நாம் செய்தது தவறு என உணர்வார்களா?
காங்கிரசும் கம்யூனிஸ்டும் தங்களை திமுகவிற்கு மாற்றாக வளர்த்துக்கொள்ளாமல் அஇஅதிமுகவை உருவாக்கி உயிர்கொடுத்து வளர்த்து இன்று பாஜகாவாக மாறிவருவதை எவ்வாறு புரிந்துள்ளனர்… திமுகவை அழிக்க புறப்பட்டு இன்று திமுகவோடு இணைந்து போட்டியிட்டு தங்கள் இருப்பை தற்காத்துக் கொள்ளும் நிலையில் உள்ளதை, 90 வயதுடைய தோழர் நல்லகண்ணு மற்றும் தோழர் சங்கரய்யா போன்றோரிடம் கேட்டு அறிந்து மக்களுக்கு தெரிவிப்பார்களா?