தோழர் நாபா நினைவுகள்: நெஞ்சில் ஒரு நெருஞ்சி முள்

(தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா உட்பட சக பதின்மூன்று தோழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாடு, சென்னை, சூளைமேட்டில்- இந்திய மண்ணில் வைத்துப் படுகொலை செய்த நாள் 19.06.1990. இன்றுடன் (19.06.2021) முப்பத்தியொரு ஆண்டுகள் ஓடிவிட்டன. இத்துன்பியல் நிகழ்வு நேற்றுத்தான் நடந்தது போல் இன்னும் நினைவில் நின்று நெருஞ்சி முள்ளாக நெஞ்சில் தைத்துக்கொண்டிருக்கிறது.