தோழர் வே. ஆனைமுத்து தனது சிந்தனையை நிறுத்திக் கெண்டார்.

(சாகரன்)

ஈவேரா என்று அழைக்கப்படும் பெரியாரை அறிந்தவர்கள் தோழர் வே. ஆனைமுத்துவை அறியாமல் இருக்க முடியாது. பெரியாரின் மூச்சை… சிந்தனையை… பேச்சை… செயற்பாட்டை… பெரும்பாலும் முழுமையாக தொகுத்தவர் செயற்படுத்த முற்பட்டவர் அவற்றை இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றவர் என்றால் அது தோழர் ஆனைமுத்துவையே சேரும்.
பெரியாரின் படைப்புகளைத் தொகுத்தவரும் பெரியாரிய – மார்க்சிய ஆய்வாளருமான வே. ஆனைமுத்து புதுச்சேரியில் ஏப்ரல் 06, 2021 தனது வயது முதிர்வின் காரணமாகவே நீண்ட காலமாக வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்ததவர் தனது 96 வயதில் சிந்தனையை நிறுத்திக் கொண்டார்.