நவம்பர் 19 நாபா பிறந்த தின நினைவுகள்

பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை என்றாலும் வாழ்தல் நாம் வகுத்துக்கொள்ளும் வழிமுறையில் செல்கிறது. சுயநலம், உறவுகள் நலம், பொதுநலம் என்ற தெரிவும் எமதே. அடிப்படையில் நாம் சுயநலம் கொண்டவராக ஆரம்பித்து உறவுகளின் கலப்பில் அவர் சார்ந்த நலம் பேணும் நிலைக்கு ஆட்பட்டு பின்பு சமூகப் பாதிப்பில் தான் பொதுநலம் பற்றிய சிந்தனையில் ஈடுபடுகிறோம். அதில் ஓரளவு எமது பங்களிப்பை செய்தாலும் சுயநலமும் உறவுகள் நலமும் முன்னிலைப்படுதல் யதார்த்தம்.