பற்குணம் A.F.C (பகுதி 74 )

பற்குணம் தனது நிர்வாகத்தில் மற்றவர்களை நம்பினாலும் தனது கவனத்தை திசை திரும்பவிடுவதில்லை.அடிக்கடி தனது அலுவலக கணக்குகளையும் தானே பார்ப்பார்.இவ்வாறு ஒரு நாள் மன்னாரில் தனது அலுவலக கணக்குகளை மீளாய்வு செய்தபோது 50000 ரூபா அவரின் பெயரால் எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தார்.

உடனே அலுவலக உதவியாளரை அழைத்து அலுவலகத்தில் வேலை செய்த அந்த இளைஞரைக் கேட்டார்.அவர் வரவில்லை என பதிலளித்தார் . ஆனால் அவசரப்படாமல் யாரிடமும் இதுபற்றி சொல்லாமல் அந்த இளைஞர் வீட்டுக்கு சென்றார்.அந்த இளைஞர் திருமணமானவர்.அவரின் மனைவி வீட்டிலேயே இருந்தார்.

பற்குணம் அந்த இளைஞர்தான் இந்த மோசடியை செய்திருப்பார் என ஏற்கனவே ஊகித்துவிட்டார்.ஆனாலும் அவன் ஏன் இப்படி செய்தான்.அவன் குடும்ப சூழ்நிலை என்னவென்று அஅறியவேண்டும் வீட்டுக்குச் சென்றார்.அங்கே அவனுக்கோ குடும்பத்துக்கோ எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை .அதன் பின் அவன் மனைவியிடம் விபரத்தை சொன்னார்.விசயத்தை கேட்ட மனைவி காலில் வீழ்ந்து அழுதார்.பின் அவரிடம் கணவர் கொடுத்த 25000 ரூபா அளவிலான பணத்தை அங்கேயே கொடுத்துவிட்டார்.

அதைப் பெற்றுக்கொண்ட பற்குணம் அந்த இளைஞரை தன்னை வந்து காணுமாறு மனைவியிடம். சொல்லிவிட்டு வந்தார்.பின்பு ஒருவாறாக அந்த இளைஞனும் பற்குணத்தை அவரின் இருப்பிடம் வந்து சந்தித்தார்.பற்குணம. எதுவும் பேசாமல் எடுத்த பணம் அவ்வளவும். திருப்பிதரவேண்டும் என கேட்டார்.அந்த இளைஞர் மீதி பணத்தை ஏதோவகையில் செலவாக்கிவிட்டார்.நான் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.யாரிடமும் இதுவரை சொல்லவில்லை இனியும் சொல்லமாட்டேன்.ஆனால் பணம் கட்டியாக வேண்டும் என்றார்.பின்னர் ஒருவாறாக அந்த இளைஞர் காணி ஒன்றை விற்று மீதிப் பணத்தை கட்டினார்.அதிலும் கணிசமான தொகை 10000 அளவில் குறைந்துவிட்டது .அதை ஒருவாறாக பற்குணமே சமாளித்தார்.

ஆனால் பணம் பெற்றபின் அவனை வேலையை விட்டு விலகும்படி பணித்தார்.பற்குணம் விடாப்பிடியாக அவனை விலக வைத்தார்.ஆனாலும் அவன் வயது குடும்ப சூழ்நிலை கருதி பற்குணமாகவே ஒரு வேலையை வர்த்மானியில் தேடி விண்ணப்பிக்க சொன்னார்.

இந்த இளைஞனுக்கு வேலை பெற்றுக்கொடுப்பதற்காக மஹ்றூப் தயவை நாடவேண்டி வந்தது.மஹ்ரூப் அவர்களும் ஆச்சரியப்பட்டார்.ஆனால் அவனை அழைத்துக் கொண்டுபோனபோது மஹ்றூப் அவனை அறிந்தவராக இருந்தார்.அவனுக்கு முதல் வேலையைபெற்றுக் கொடுத்ததே மஹ்ரூப்தான்.எனவே அதை விசாரித்தபோது அந்த இளைஞர் உண்மையைச் சொன்னார்.மஹ்ரூப் அவனை கண்டபடி ஏசினார்.பற்குணம் தனக்காக இந்த உதவியை செய்யும்படி கோர மஹ்ரூப் பற்குணத்திடம் உங்களுக்கு பைத்தியமா எனக் கேட்டாராம்.

அதற்குப் பற்குணம் என்னால் அவன் வாழ்வு பாழாவதை விரும்பவில்லை.அவனுக்கு குடும்பம் ஒன்று உண்டு தயவை செய்து அவனுக்கு உதவுங்கள் என்றார்.வேறு வழியின்றி விருப்பமின்றி அந்த வேலையை மஹ்ரூப் அவனுக்குப் பெற்றுக் கொடுத்தார்.அதன் பின் அந்த இளைஞர் திருந்திவிட்டார்.

1988 ஆம் ஆண்டு நான் கொழும்பில் நின்றபோது அந்த இளைஞர் என்னைக் காணவந்தார்.அப்போது இந்தக் கதைகளை அந்த இளைஞர் எனக்குச் சொல்லி கவலைப்பட்டார்.இது பற்றி பற்குணத்திடம் கேட்டபோது சிரித்துக்கொண்டே ஓம் என்றார்.ஆனால் நீ ஏதாவது சொன்னியா எனக் கேட்டார்.நான் இல்லை என்றேன்.இதை யாரிடமும் சொல்லாதே என்றார்.

தான் செய்த உதவிகளை,செய்யும் உதவிகளை சொல்லி அவர் விளம்பரம் தேடுவதில்லை.அதைக் கௌரவக்குறைவாகவே கருதினார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)