அமெரிக்கத் தேர்தலில் வெல்லப் போவது யார்…..?

கடந்த வெள்ளிக் கிழமை Time FM வானொலியில் ‘வெட்ட வெளிச்சம்’ கலந்துரையாடலில் வழமை போல் நானும் கலந்து கொண்டேன். தலைப்பு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்வார்கள் இவர்ளின் வெற்றியில் எமக்கு ஏற்படும் நன்மை தீமை பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது எனது ஆதரவு பசுமைக்கட்சிக்கு என்றும் ஆனால் கிலாரி அல்லது ரம்ஸ் இருவரில் ஒருவரே வெல்லக் கூடிய வாய்புக்கள் இருப்பதினால் எனது வெற்றிக்கான எதிர்வு கூறல் கிலாரி கிளிங்ரன் பக்கமே நின்றது. மற்ற மூவரும் ரம்ஸ் பக்கமே நின்றனர் கூடவே ரம்ஸ் இன் வெற்றி கிலாரியின் வெற்றியை விட நன்மை பயக்குமாக அமையும் என்றும் வாதிட்டனர்.

இவர்களின் கருத்திற்கு மாறான கருத்தை நான் கொண்டிருந்தேன். அமெரிக்க ஆளும் வர்க்கமே வெற்றி பெறுவதை தீர்மானிப்பவர்கள். அந்த வகையில் அவர்கள் கிலாரியின் வெற்றியை விரும்புகின்றனர். எனவே கிலாரி இன் வெற்றி உறுதியானது என்பதே என் வாதமாகும். மேலும் ஒபமாவின் முதலாவது தவணையில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விருப்பங்களை அரசின் முக்கிய பதவியில் இருந்து நிரூபித்துக் காட்டிய கிலாரியை அமெரிக்க ஆளும் வர்கம் தமது சிறந்த தெரிவாக தெரிவு செய்துவிட்டது.

புஷ் காலகட்டததை விட ஒபமா காலத்திலேயே அமெரிக்கா அதிக யுத்தங்களை நடத்தியிருக்கின்றது. இதில் கிலாரியின் பங்கு மகத்தானது. மேலும் சமாதானத்தை காட்டும் முகத்தை வைத்துக் கொண்டு யுத்தம் செய்யும் தலவரையே அமெரிக்க ஆளும் வர்க்கம் விரும்பும் முகமாக புஷ் கால கட்டத்தின் பின்பு விரும்புகின்றது. இது நல்லாகவே பொருந்துகின்றது கிலாரிக்கு.

இதில் சிறுபான்மை இனங்களுக்கெதிரான வெளிப்படையான பேச்சு.. மதில் கட்டுதல்.. முஸ்லீம் மக்களை அமெரிக்காவிற்குள் புகவிடமாட்டேன்… பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளாமை அரசுக்கு வரி கட்டாமை திவாலாகிப் போன சுய வருமான செயல்கள் இவைகளைக் கொண்ட ஒருவர் அமெரிக்க அதிபராவது அமெரிக்காவின் இமேஜை கெடுக்கும் விடயமாக அமையும் என்பதினால் ரம்ஸ் ஐ அமெரிக்க கனவான் ஆளும் வர்க்கம் ஆரம்பித்திலேயே நிராகரித்து விட்ட நிலையில் இன்று நடைபெறும் தேர்தலில் கிலாரி கிளிங்ரனின் வெற்றி அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வெற்றியாக அமையும் என்ற தொனிப்பட எனது பேச்சுக்கள் இருந்தன.