பற்குணம் A.F,C ( பகுதி 62 )

பற்குணம் தொடர்பான செய்திகள் யாழ்ப்பாணத்தில் பரவலாக பேசப்பட்டன.ஆனால் நாங்களோ பற்குணம் தொடர்பாக கவலையுடன் இருந்தோம்.அம்மாவின் நிலை ஒருபுறம் ஏக்கம்.இதேபோல இன்னொரு சம்பவம் அனுராதபுரத்தில் நடந்தது. அதை இலங்கை அரசு தனது அறிக்கையில் வாசித்தது. நல்லவேளை பற்குணம் தொடர்பான செய்திகள் அந்த அறிக்கையில் வரவில்லை. அனுராதபுரத்தில் கிராமம் ஒன்றில் நடந்த சம்பவத்தில் சிலர் கொல்லப்பட்டனர். அந்த தமிழரை ஒரு சிங்கள பொலிஸ் அதிகாரி காப்பாற்றி யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார்.

கலவரம் ஓய்ந்த பின் பற்குணம் வீட்டுக்கு வந்தார்.அம்மா அஅவரைகள் கட்டிப்பிடித்து அழுதார். பற்குணத்தின் உடமைகள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டன.அதையிட்டு அவர் சொன்ன வார்த்தை அம்மா அன்று குச்சவெளி மக்கள் அன்பாக எனக்கு தந்த பொருட்கள். இப்போது இன்னொரு பக்க ஏழைகள் எடுத்துவிட்டனர். எனக்கு ஆபத்து இல்லை வந்துவிட்டேன் என்றார்.

பற்குணம் வீடு திரும்பியபின் மனைவின் அண்ண்ன் சண்முகம் மிகவும் வறுமையானவர்.கூலித் தொழிலே அவர் வருமானம்.அவர் உடனே பத்து கொத்து அரிசி,பத்து தேங்காய்கள்,காய்கறிகள் என கொண்டுவந்து தங்கைச்சி என்னால் முடிந்தது இதுதான் என அண்ணியிடம் கொடுத்தார்.அவரின் வறுமை நிலை அறிந்த அண்ணி வாங்க மறுத்தார்.இதைக் கண்ட பற்குணம் மனைவியை கடிந்துவிட்டு அந்த பொருட்களை அன்போடு வாங்கினார்.

அப்போது அண்ணி அவர்கள் நிலை அறிந்தும் ஏன் வாங்கினீர்கள் என பின்னர் கேட்டார்.நான் அதை வாங்காவிட்டால் அவர் மனம் வேதனைப்படும்.மேலும் தன் ஏழ்மை நிலை அறிந்து வருந்துவார் என்றார். எனவே அவரை கௌரவப்படுத்தும் வேண்டும் .அதற்காகவே வாங்கினேன் என்றார். இந்த சம்பவத்தை மறக்க முடியாத பற்குணம் பல தடவைகள் என்னிடம் அவரைப் பெருமையாக சொல்லுவார்.

இந்த சம்பவத்தின் பின் பற்குணத்தின் எதிர்காலம் தொடர்பாக அம்மாவும் நாங்களும் கவலைகொண்டோம்.அவரது எதிர்காலம் மட்டுமல்ல எங்கள் எதிர்காலமும் அவரின் வாழ்விலேயே தங்கியிருந்தது.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)