பிரபாகரனும் முஸ்லீம் காங்கிரசும்

“மிகவும் இன்முகத்துடன் எங்களை வரவேற்ற ஒருவராக மிகவும் சிநேகமான புரிந்துணர்வுடன் , திறந்த மனதுடன் கதைக்கின்ற ஒருவராக அவரை நாங்கள் பார்த்தோம்; எதிர்பார்த்ததைவிடவும் எந்தக்கடினப்போக்குமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் ஒரு நெருங்கிய நட்பை ஏட்படுத்திக்கொள்ள வேண்டுமென்கின்ற வாஞ்ஞையுடன் இருப்பதாக அவரை நான் பார்த்தேன்; எதிர்பார்த்ததைவிடவும் இந்தச்சந்திப்பு எங்களுக்கிடையே இருக்கின்ற சந்தேகங்களை களைய உதவியிருக்கிறது.” இதுதான் முஸ்லிம்களை வேரறுத்த இன சம்ஹாரம் செய்த பிரபாகரனைப் பற்றி அவரை சந்தித்தபிறகு ஹக்கீம் முன்வைத்த அபிப்பிராயம். இப்படிச்சொல்லி சில மாதங்கள் கடக்கவில்லை மூதூரும் வாழைச்சேனையும் புலிகளின் வன்முறையில் முஸ்லிகளை சமாதானத்தின் பெயரால் பலிபீடத்திற்கு அனுப்பியது. மூதூரியில் நடந்த கலவரத்தின் பின்னர் முஸ்லிம்கள் மீது புலிகள் சமாதானத்துக்கான விலையை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தபின்னர், ரணில் என் காலடிக்கு வரவேண்டும் , தனது கோரிக்கை நிறைவேற்றவேண்டும் என்று ஹக்கீம் அன்று அரசியல் அடம் பிடித்தும் ரணில் “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” கதையாய் இவருக்கு அசையவில்லை. (Bazeer Seyed)