பிரதமர் உருத்திரகுமாரனின் கனவுகளுக்குள் யதார்த்தத்தைத்தேடி….!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE)…..! 

இது தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட 115  உறுப்பினர்களும், 20 நியமன உறுப்பினர்களுமாக, மொத்தம்  135 உறுப்பினர்களைக் கொண்டது. அமெரிக்க நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் யாழ்.மேயர் இராசா விஸ்வநாதனின் புதல்வர்.   விடுதலைப்புலிகளின் சட்ட மற்றும் அரசியலமைப்பு நிபுணர். 2010 மே மாதம்17 ம் திகதிதியில் இருந்து உருத்திரகுமாரனின் அரசாங்கம் தமிழீழத்தில் “எக்ஸ்ஸில்ஆட்சி” நடாத்துகிறது.