புலம் பெயர் தேசங்களில் மக்களை ஏமாற்றி பிழைக்கும் புலி பினாமிகளே……

ஆரம்பத்தில் மிதவாத அரசியல் ஈழ தலைவர்களை துரோகி என்றீர்கள் அதற்க்கும் தலையாட்டினோம். பின் மாற்று போராட்ட தலைவர்களையும் போராளிகளையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். எல்லா சிங்கள அரசையும் சிங்கள தலைவர்களையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். முஸ்லிம்களை ஒதுக்கினீர்கள் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். இந்திய தலைவர்களையும் இந்தியாவையும் அவர்களோடு உறவு வைத்திருந்த தலைவர்களையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம்.

சமாதானம் பேச வந்த சர்வதேசத்தையும் துரோகிகள், சதிகாரர்கள் என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். உங்களிடமிருந்து பிரிதவர்களையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். இறுதியில் சரணடைந்த போராளிகளையும் துரோகி என்றீர்கள் அதற்கும் மௌனமாக தலையாட்டினோம்.

வெளிநாட்டில் சேர்க்கப்பட்ட மக்களின் பணம் எங்கே என்று கேட்டவர்களையும் துரோகிகள் ஒட்டு குழுக்கள் என்றீர்கள். அதற்கும் தலையாட்டினோம். இப்பொழுது நீங்களா அவர்களா துரோகிகள் எனும்போது உங்களையும் துரோகிகள் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட போராளிகள். அதனை ஏற்கவா தலையை கவிழ்க்கவா?
(SP. Suba)