புலம்பெயர் நாடுகளிலிருந்த பினாமிகளின் சொத்துக் குவிப்பு வியாபாரம் ஆட்டம்காண ஆரம்பித்தபோது

மகிந்தவிற்கு பின்னர் ஆட்சியிலமர்ந்த மைத்திரி அரசுடன் ஊடல் கொண்ட விக்னேஸ்வரனைப் புலம்பெயர் குழுக்கள் கையாள ஆரம்பித்தன. புலிகளின் அழிவின் பின்னர் புலம்பெயர் நாடுகளிலிருந்த பினாமிகளின் சொத்துக் குவிப்பு வியாபாரம் ஆட்டம்காண ஆரம்பித்தபோது தமதுவியாபாரத்திற்கு விலைபோகும் வியாபாரிகளை அவர்கள் தேட ஆரம்பித்தனர். அத் தேடலின் விளைவாக வட மாகாண சபையிலிருந்த விக்னேஸ்வரனும் அவரது சகாவான ஐங்கரநேசனும் இந்த வியாபார வலைப்பின்னலில் இணைந்துகொண்டனர்.

இன்றைய செய்திகள்
சிங்கக்கொடி ஏற்றி தேசியவாதி வேடத்தைக் கலைத்த விக்னேஸ்வரன் – பினாமிகள் எங்கே?
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்குத் தீனி போட ஆரம்பித்து இப்போது அண்ணளவாக இரண்டு வருடங்கள் நிறைவுறுகின்றன. சமூக வலைத்தளங்கள், தேசியம் என்ற பெயரில் ஊடக வியாபாரம் நடத்திய இணையங்கள், அரசியல் கட்சிகள் என்று விக்னேஸ்வரனை காட்டி மக்களை ஏமாற்றிய கும்பல்கள் பொதுவாகப் புலம்பெயர் நாடுகளிலேயே நிலை கொண்டிருந்தன. இவர்களில் பொதுவாக அனைவருமே மக்களின் அவலங்களையும் கண்ணீரையும் தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர்.

விக்கியை இயக்குவதற்கென்றே புலம்பெயர் நாடுகளில் குழுக்களும் தனி நபர்களும் உருவாகியிருந்தனர். அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலைகொண்டிருந்த இக் குழுக்களும் தனி நபர்களும் இந்திய மற்றும் அமெரிக்க நலன்களுக்காகச் செயற்படுபவர்களாகக் காணப்பட்டனர். மக்கள் நலனின் எந்த அக்கறையுமற்ற இக்குழுக்கள் விக்னேஸ்வரன் ஊடாக கட்டமைக்க முனைந்த சந்தர்ப்பவாத அரசியல் இன்று முகத்திரை கிழிக்கப்பட்டு நிர்வாணமாகத் தொங்க ஆரம்பித்துள்ளது.

ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனின் கூட்டணி, சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து நடத்தப்பட்ட அழிவை மூடி மறைத்து யாழ்ப்பாணத்தின் மூன்றில் ஒரு பகுதியின் நீரையும் நிலத்தையும் நஞ்சாக்க உதவியது.

புலிகளின் அழிவிற்குப் பின்னதாகவே தனக்கு அரசியல் பேசும் சுதந்திரம் கிடைத்திருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த விக்னேஸ்வரன் மகிந்த அரசுடன் தனது அரசியல் உறவை வளர்த்துக்கொண்டார். மகிந்தவிற்கு பின்னர் ஆட்சியிலமர்ந்த மைத்திரி அரசுடன் ஊடல் கொண்ட விக்னேஸ்வரனைப் புலம்பெயர் குழுக்கள் கையாள ஆரம்பித்தன. புலிகளின் அழிவின் பின்னர் புலம்பெயர் நாடுகளிலிருந்த பினாமிகளின் சொத்துக் குவிப்பு வியாபாரம் ஆட்டம்காண ஆரம்பித்தபோது தமதுவியாபாரத்திற்கு விலைபோகும் வியாபாரிகளை அவர்கள் தேட ஆரம்பித்தனர். அத் தேடலின் விளைவாக வட மாகாண சபையிலிருந்த விக்னேஸ்வரனும் அவரது சகாவான ஐங்கரநேசனும் இந்த வியாபார வலைப்பின்னலில் இணைந்துகொண்டனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து எழுதப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் வட மாகாண சபையில் விக்னேஸ்வரனால் வாசிக்கப்பட்ட பின்னர் அவர் பிரித்தானியாவிற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின்னர் முழுநேர தேசியவாத நாடகத்தை ஆரம்பித்த விக்னேஸ்வரன் கடந்தவாரத்தோடு அதனை முடிவிற்குக் கொண்டுவந்தார்.

ராஜபக்சவிற்கு எதிரான பொதுக்கூட்டம் ஒன்றில் பேரினவாதிகளுடன் இணைந்து சிங்கக்கொடி ஏந்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் புலம்பெயர் நாடுகள் முழுவதிலும் துரோகியாக்கப்பட்டதற்கான காரணம் வெளிப்படையானது. புலம்பெயர் பிழைப்புவாதிகள் ஊடாக அல்லாமல் நேரடியாகவே அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற கொலைகார அரசுகளுடன் நேரடியாகத் தொடர்புகளைப் பேணிக்கொண்ட கூட்டமைப்பு தமது பிடிக்குளிருந்து விலகிச் செல்கின்றது என்பது மட்டுமே புலம்பெயர் குழுக்களின் ஒரே துயரமாகக் காணப்பட்டது.

இன்று அதே சிங்கக்கொடியை ஏற்றிவைத்து தனது தேசியவாதி வேடத்தை விக்னேஸ்வரன் கலைத்துக்கொண்டார். இனிமேல் விக்னேஸ்வரனைப் பிரதியிட புதிய தனி நபர்களைத் தேடும் முயற்சியில் புலம்பெயர் வியாபாரக் குழுக்கள் ஆரம்பித்துவிடும். தவிர, விக்னேஸ்வரன் சிங்கக்கொடியை ஏற்றியபடியே புலம்பெயர் அமைப்புக்களின் கட்டுப்பாட்டினுள் செயற்படுவாரானால், அவரது தேசியவாதி வேடம் தொடரும் வாய்ப்புக்களும் உண்டு.

தமது அன்றாட வாழ்க்கையுடன் குறைந்தபட்சத் தொடர்புகளுமற்ற புலம்பெயர் பிழைப்புவாதிகள் இதுவரை நடத்திய அழிவு மக்கள் மத்தியிலிருந்து தோன்றக் கூடிய முன்னேறிய அரசியல் தலைமைகளை அழித்துச் சிதைத்துவிட்டது. அமெரிக்கா போன்ற கொலைகார ஏகபோக அரசுகளிடன் தமிழ்ப் பேசும் மக்களின் தலைவிதையை ஒப்படைத்துவிட்ட இப் பிழைப்புவாதிகள் இனிமேலும் மக்களை ஏமாற்றி வயிற்றுப்பிழைப்பு நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

(இனியொரு…)