புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 1)

(சிவராசா கருணாகரன்)

வெளிச்சம் பத்திரிகை வன்னிப்பெருநிலப்பரப்பில் வெளியாகிவந்த புலிகளின் பரப்புரைப் பத்திரிகை. அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக செயற்பட்டு வந்தவர் சிவராசா கருணாகரன். ஈரோஸ் எனப்படும் ஈழப் புரட்சிகர அமைப்பின் உறுப்பினரான கருணாகரன், புலிகள் சகல இயக்கங்களையும் தடைசெய்து ஈரோஸை தம்முடன் இணைத்துக்கொண்டபோது புலிகளை ஏற்றுக்கொண்டு பாலகுமாரன் வழி சென்றவர் என்பதுடன் புலிகளின் மனிதவிரோத , பாசிஸ, எதேச்சதிகார செயற்பாடுகளை வெளிச்சம் பத்திரிகை ஊடாக நியாப்படுத்தி வந்ததுடன் புலிகளை மக்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தவர்.