போரில் இறந்தவர்களை நினைவு கூருதல்

(Maniam Shanmugam)
இலங்கையில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் 2009 மே மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 27 வருடங்களாக நடந்த போரில் இறுதியாக அரச படைகள் புலிகளை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் வைத்துத் தோற்கடித்தன. இந்த இறுதிப் போரில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், அவரது முழுக் குடும்பம், பல நூறு புலிப் போராளிகள் கொல்லப்பட்டனர்.