மக்கள் போராட்டங்களை

(நடிகர் சூர்யா கட்டுரையிலிருந்து)

மக்கள் போராட்டங்களை  ‘பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட தொழிற்சாலைகளை மூடச்சொல்வது நியாயமில்லை; திட்டங்களை நிறுத்தச் சொல்வது சரியில்லை’ என்று கொச்சைப்படுத்துபவர்கள், பல ஆயிரம் மக்கள்
புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால்
பாதிக்கப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்?

மக்கள் தங்களுடைய நலனைப் பாதுகாக்கவே
வாக்களித்து அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அந்த அரசு மக்களின் பக்கம் நிற்பதுதானே அறம்?

அரசு என்ன சொல்கிறது,
‘வேலைவாய்ப்பு தருகிறோம்’ என்கிறது.
‘எங்களுக்கு உங்கள் வேலை வேண்டாம்.
உயிரும் ஆரோக்கியமான வாழ்க்கையும்தான் முக்கியம்’
என்று மக்கள் சொல்லும்போது,
‘உங்கள் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்’
என்ற அரசின் பதில்
உள்நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது.

அப்படியென்றால்,
யாருடைய வாழ்வாதாரத்தை அடகுவைத்து,
யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்களை
நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்?

ஒரு பிரச்சினையை எதிர்த்து
மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது,
மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்.
சட்டத்தின் துணை கொண்டும், அதிகாரத்தின் வாள் கொண்டும் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது.

வயல்களை அழித்து, மலைகளை உடைத்து,
வனத்தை நாசப்படுத்தி, ஆறுகளைச் சூறையாடி
கொண்டுவரப்படும் எந்தப் பொருளாதார லாபமும்
நிச்சயம் மக்களுக்கானவை அல்ல.
அது வேறு யாருக்கானதோ என்பது நிதர்சனம்.

இனி இழப்புகள் மக்களுக்கானதாக இருக்கக் கூடாது.
இனியும் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத!