தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டை

தூத்துக்குடி மாவட்ட மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு -1 மார்ச்சு 31, 2018க்குப் பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை அந்தக் குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் ஏப்ரல் 9, 2018 நாளிட்ட குறிப்பாணை மூலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது. இந்த முடிவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் முகமது நசிமுத்தின் கூறியுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.மே 22, 2018 அன்று நூறாவது நாளான போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 17 வயது பெண் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் மீதும், முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு மக்கள் பாதுகாப்பிற்காக நடந்தது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்படுகிறது.. இதைத் தொடர்ந்து மே 23, 2018 அன்று தூத்துக்குடி அண்ணா நகரில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் காவல்துறையினர் 132 பேரை கைது செய்துள்ளனர்
ஸ்டெர்லைட்_ஆலையும்_அதன்_பின்னனியும்

1.உரிமையாளர் – அனில் அகர்வால்

2.தலைமையிடம் – இலண்டன்,இங்கிலாந்து

3.நிறுவனப் பெயர் – வேதாந்தா ரிசோர்ஸ்

4.அமைத்துள்ள இடம் – தூத்துக்குடி

5.முக்கிய உற்பத்தி – தாமிரம் (copper )

6.கழிவு உற்பத்தி – தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம்

7.முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத்

8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத்,மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா

9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் – மகாராஷ்டிரா , ரத்னகிரி

10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் – சரத்பவார்

11.அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு

12.அடிக்கள் நாட்டியவர் – முதல்வர்
ஜெ.ஜெயலலிதா 1994

13.ஆலை இயங்க அனுமதியளித்தவர் – முதல்வர் மு.கருனாநிதி 1996

14.அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்

15.முதல் உண்ணாவிரத போராட்டம் -1996

16.போராட்டம் நீர்த்த காரணம் – தென் மாவட்ட சாதிசண்டை

17.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு – தாமிரபரணி

18.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7

19.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)

20.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)

21.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)

22.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)

23.ஐந்தாம் விபத்து – ஆயில் டேங்க் வெடிப்பு

24.ஆறாம் விபத்து – நச்சுப்புகை வெளியேற்றும் அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்

25.உற்பத்தி செய்தது – 2லட்சம் டன் (2005 கணக்கில்)

26.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28

27.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா

28.மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து -உச்சநீதிமன்றம்

29.தமிழ்நாடு பசுமை வாரிம் – தடை

30.தேசிய பசுமை வாரியம் – அனுமதி……