மலரவிருக்கும் 1,000 தேயிலைப் பூக்கள் நலன்புரியைக் கருகிவிடக்கூடாது

பெருதோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி, பட்டாசு கொளுத்திய சத்தங்களால் பலருக்கும் கேட்காமல் போயிருக்கக் கூடும். ஆனால், சம்பள நிர்ணய சபையின் ஊடாக, அடைப்படைச் சம்பளம் 900 ரூபாயாகவும் பட்ஜெட் கொடுப்பனவு 100 ரூபாயாகவும் சேர்த்து, நாளொன்றுக்கு ரூ.1,000 வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.