மாகாண சபைத் தேர்தல்: பொறியில் சிக்கிய அரசாங்கம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள், நாட்டு மக்கள் மனதில் கட்டி எழுப்பிய, “எமது பதவிக் காலத்தில், மாகாண சபை முறைமையை இரத்துச் செய்வோம்” என்ற அபிப்பிராயம், முற்றாக ஒழிந்துவிட்டது. மாகாண சபைகளை இரத்துச் செய்வதைப் பற்றி, அரசாங்கத்தின் தலைவர்களில் எவரும் இப்போது பேசுவதில்லை. மாறாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதைப் பற்றியே, இப்போது கலந்தாலோசித்து வருகிறார்கள்.